ஜெயலலிதா இல்லாத அதிமுக, பிஜேபிக்கு அடிமையாகிவிட்ட சூழலில் அவரது இழப்பு அதிகம் தெரிகிறது என ஜோதிமணி எம்.பி., தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா இல்லாத அதிமுக, பிஜேபிக்கு அடிமையாகிவிட்ட சூழலில் அவரது இழப்பு அதிகம் தெரிகிறது என ஜோதிமணி எம்.பி., தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் முதல் பெண் எதிர்கட்சித்தலைவர்; நாடாளுமன்ற உறுப்பினர், 6 முறை முதலமைச்சர் என தமிழக அரசியலில் இரும்பு பெண்மணியாக உலா வந்தார் ஜெயலலிதா. உடல் நலக்குறைவால் 2016-ம் ஆண்டு இதே நாளில் உயிரிழந்தார். இவரின், நான்காவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது திருவுருவப்படத்திற்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’ஜெயலலிதாவின் அரசியலோடு வேறுபடலாம். ஆனால் ஒருபெண்ணாக அவர் கடந்துவந்த பாதை, சந்தித்த போராட்டங்கள் சாதாரணமானதல்ல. எல்லாவற்றையும் தாண்டி ஆணாதிக்கம் நிறைந்த அரசியல்சூழலில் ஒரு வெற்றிகரமான தலைவரானவர். அவரில்லாத அதிமுக- பிஜேபிக்கு அடிமையாகிவிட்ட சூழலில் அவரது இழப்பு அதிகம் தெரிகிறது.’’ என அவர் தெரிவித்தார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 5, 2020, 11:17 AM IST