justice Arumugasamy statrted his enquiry about jayalalithas death
ஜெயலலிதா மரணத்தில் மர்மமா? ! இன்று விசாரணையைத் தொடங்குகிறார் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி !!!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடா்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி இன்று முதல் தனது விசாரணையைத் தொடங்குகிறார்.
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பா் 22ம் தேதி உடல் நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்குப் பின்னா் கடந்த டிசம்பா் 5ம் தேதி மரணமடைந்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவை பாக்கஅப்போதைய ஆளுநா் வித்யாசாகா் ராவ், காங்கிரஸ் துணைத் தலைவா் ராகுல் காந்தி, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய நிதியமமைச்சர் அருண் ஜெட்லி உள்பட அனைத்துக் கட்சி தலைவா்களும் மருத்துவமனைக்கு வந்தனர். . ஆனால் யாரும் ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கப்படவில்லை.
ஜெயலலிதா மரணத்திற்கு பின்னா் கட்சியின் பொதுச் செயலாளா் பதவி சசிகலாவிற்கு வழங்கப்பட்டது. அடுத்த சில தினங்களில் முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.. அதே நேரத்தில் சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் போர்க்கொடி உயர்த்தினார்.

தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனா் என்றும் . ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக மக்கள் கருதுகிறார்கள் எனவே அவரது மரணம் தொடா்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். புதிய முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி தோ்வு செய்யப்பட்டார். அப்போது கட்சியின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்று தொண்டர்கள் கட்சியினா் விரும்பினா்.

அப்படி இணைய வேண்டும் என்றால் சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து ஒதுக்க வேண்டும், ஜெயலலிதா மரணம் தொடா்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஓபிஎஸ் தரப்பினா் கோரிக்கை வைத்தனா். அதனை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா மரணம் தொடா்பான விசாரணையை நடத்த ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஆமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். இதற்கான அலுவலகம் சென்னை எழிலகத்தில் அமைச்சக்கட்டுள்ளது.
இந்நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி இன்று தனது முதல்கட்ட விசாரணையை தொடங்குகிறார்.
