judgement is favour for ops and other 10 mla
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி திமுக தொடர்ந்த வழக்கில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
அதன்படி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யுமாறு சபாநாயகருக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது
அதாவது இந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு குறித்த தீர்ப்பு திமுகவிற்கு சாதகமாக அமைய வில்லை.

திமுக கொறடா சக்கரபாணி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டப்பேரவையில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு கொறடா உத்தரவை மீறி வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்கள் ஓ.பன்னீர்செல்வம், செம்மலை, பாண்டியராஜன், ஆறுக்குட்டி உள்ளிட்ட 11 பேரை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக சபாநாயகரிடம் மனு அளித்த போதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கில் இறுதி விசாரணை கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி நிறைவடைந்தது.எழுத்துப்பூர்வமான வாதங்கள் மார்ச் 7 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி உள்ளனர்.
