வழக்கு இருக்கட்டும் மக்கள் பிரச்சனைகள் பலவற்றில் ஒன்று சேராத திமுகவும் , அதிமுகவும் ரூபாய் நோட்டு விவகாரத்தில் ஒன்றாக கரம் கோர்த்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது என்று உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு வங்கி மற்றும் வேளாண்மை சங்கங்களுல்கு பணப்பரிமாற்றம் செய்ய ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிடக்கோரி ராமமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ரிசர்வ் வங்கி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் புதிய 500 நோட்டு வந்துள்ளது. என்று தெரிவித்தார், ஆனால் எவ்வளவு தொகை வந்துள்ளது எனபது பற்றி தெரிவிக்கவில்லை என்று கூறினர்.

ரிசர்வ் வங்கி சார்பில் எவ்வளவு என்பதை வெளிப்படையாக சொல்லாமல் கடிதத்தில் உள்ளது. என கடிதம் தந்தனர். 

 புதிய நோட்டுகள் பகிர்ந்தளிக்கப்படுகிறது என்று தெரிவித்தனர். 

அப்போது பேசிய உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் அதிமுகவும், திமுகவும் மக்கள் பிரச்சனைக்காக ஒன்று சேர மாட்டார்கள் , ஆனால் இப்போது ஒன்று சேர்ந்துள்ளது மகிழ்ச்சி. முல்லை பெரியாறு, பாலாறு, காவிரியில் ஒன்று சேராதவர்கள் இப்போ சேர்ந்துள்ளார்கள். கறந்த பால் மடி புகாது , காய்ந்த கருவாடு மீனாகாது என்று தெரிவித்த திமுக அதிமுக இன்றாக இணைந்து போராடுவது வரவேற்கத்தக்கது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

 அதிமுக , திமுக உள்ளிட்ட கட்சிகள் மக்களின் கஷ்டப்படுவதை பார்த்து ஒன்றாக போராடுவார்களேயானால் அதை வரவேற்கிறேன். அதே சமயம் அதில் உள்நோக்கம் இருந்தால் அவமானத்துக்குரியது என்றார். 

அப்போது ரிசர்வ் வங்கி சார்பில் ரூ.2000 க்கு மட்டும் 80000 ஏ.டி.எம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ரூ.500 க்கு ஏற்ப ஏ.டி.எம் மாற்ற 40000 பேர் பணியாற்றி வருஜிறார்கள் என்று தெரிவித்தனர். 

இதற்கு நீதிபதி ஸ்டேட் வங்கிக்கு மட்டும் ரூ.500 ரூபாய் போவதாக கூறுகிறார்களே என்று கேட்டார் , இதை மறுத்த ரிசர்வ் வங்கித்தரப்பு இல்லை எனது உதவியளர் கூட கார்பரேசன் வங்கி மூலம் ரூ.500 நோட்டு பெற்றுள்ளார் என்று தெரிவித்தார். 

விவசாய பாதிப்பு, ரூபாய் நோட்டில் மாற்றம், பணம் எடுப்பது என மூன்று கோரிக்கையுடன் வந்துள்ளார் இதற்கு என்ன விளக்கம் என்று நீதிபதி கேட்டார்.

ஸ்டேட் வங்கி அதிக கிளைகள் கொண்ட மிகப்பெரியது என்பதால் கூடுதல் 500 ரூபாய் நோட்டு கள் போயிருக்கலாம் என ரிசர்வ் வங்கி சார்பில் தெரிவித்து விரைவில் அதிக அளவில் ரூபாய்கள் புழக்கத்திற்கு வர உள்ளது , மேலும் ரிசர்வ் வங்கியில் ரூ.2000 கொண்டு சென்றால் இரண்டு 500 ரூபாய் நோட்டுகள் மற்றும் மீதம் சில்லறையாக கிடைக்கும் என தெரிவித்தனர்.

500 ரூபாய் நோட்டு கொடுக்கப்பட தொடங்கி விட்டதால், பிரச்சனை விரைவில் முடியும் ஆகவே வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைப்பதாகவும் எந்த உத்தரவும் இல்லை என்று தெரிவித்தார்.