Asianet News TamilAsianet News Tamil

குடிபோதையில் எழுதகூசும் அளவுக்கு கேவலமாக பேசிய காவல் ஆய்வாளரை விடாதீங்க.. முதல்வருக்கு ஜோதிமணி வைத்த கோரிக்கை

ஆய்வாளர் கண்ணதாசன் குடிபோதையில் இருந்திருக்கிறார்.பாலியல் பெண்ணை பறிகொடுத்த, கணவனை இழந்த ஒரு பெண்ணை இரவு நேரத்தில்  காவல் நிலையத்திற்கு வரவழைத்திருக்கிறார். எழுதகூசும் வார்த்தைகளால் கேவலமாக பேசியிருக்கிறார். இரவுமுழுவதும் காவல் நிலையத்தில் பெண்களை இருக்க செய்திருக்கிறார். இரவு முழுவதும் உறவினர்களை லாக்கப்பில் வைத்து அடித்திருக்கிறார். 

jothimani letter to CM Stalin
Author
Karur, First Published Nov 22, 2021, 3:13 PM IST

சிறப்பாக பணியாற்றுகிற அதிகாரிகளின் நற்பெயரையும் சேர்த்து இதுபோன்ற கயவர்கள் கெடுத்துவிடமாட்டார்களா? உடனடியாக காவல்துறை சம்பந்தப்பட்ட ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என முதல்வருக்கு எம்.பி. ஜோதிமணி கோரிக்கை வைத்துள்ளார்.  

இது தொடர்பாக ஜோதிமணி தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில்;- கரூரில் பாலியல் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் தாயார்,உறவினர்களிடம் கொடூரமாக நடந்துகொண்ட காவல் ஆய்வாளர் கண்ணதாசன் நேற்று இரவு தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் மீது இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை. உடனடியாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட வேண்டும். இதுதொடர்பாக நேற்றே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  அவர்களுக்கும், காவல்த்குறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு  அவர்களுக்கும் புகார் அனுப்பியுள்ளேன்.

jothimani letter to CM Stalin

அந்த பெண்ணின் குடும்பத்திற்கு சட்டரீதியான உதவிகளை வழங்க ஏற்பாடுகளை செய்து வருகிறோம். ஆய்வாளர் கண்ணதாசன் குடிபோதையில் இருந்திருக்கிறார்.பாலியல் பெண்ணை பறிகொடுத்த, கணவனை இழந்த ஒரு பெண்ணை இரவு நேரத்தில்  காவல் நிலையத்திற்கு வரவழைத்திருக்கிறார். எழுதகூசும் வார்த்தைகளால் கேவலமாக பேசியிருக்கிறார். இரவுமுழுவதும் காவல் நிலையத்தில் பெண்களை இருக்க செய்திருக்கிறார். இரவு முழுவதும் உறவினர்களை லாக்கப்பில் வைத்து அடித்திருக்கிறார். 

jothimani letter to CM Stalin

பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக சித்தரிக்கவும் முயன்றிருக்கிறார். பாலியல் கொடுமைக்கு நீதிகேட்டு காவல்நிலையம் போனால் இதுதான் நடக்கும் என்றால் அந்த குடும்பம் என்னபாடு பட்டிருக்கும்? இது தண்டனைக்குரிய குற்றமில்லையா? தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள ஆய்வாளர் சத்தமில்லாமல் மீண்டும் உள்ளே வந்துவிடுவார். மீண்டும் அதே தவறை செய்வார். காவல்துறையில் நேரம் காலமில்லாமல், சிறப்பாக பணியாற்றுகிற அதிகாரிகளின் நற்பெயரையும் சேர்த்து இதுபோன்ற கயவர்கள் கெடுத்துவிடமாட்டார்களா? உடனடியாக காவல்துறை சம்பந்தப்பட்ட ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அப்பொழுதுதான் இதுபோன்ற குற்றங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க முடியும் என ஜோதிமணி கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios