தமிழக அரசியலில் கட்சிகளின் தலைவர்கள் சிலநேரங்களில் அதிரடி செய்வார்கள். ஆனால் அதிரடி நபர் ஒருவரே அரசியல் தலைவராகவும் இருக்கிறாரென்றால் அது  ஜான்பாண்டியனை தவிர வேறு யாரு?  

தமிழக அரசியலில் கட்சிகளின் தலைவர்கள் சிலநேரங்களில் அதிரடி செய்வார்கள். ஆனால் அதிரடி நபர் ஒருவரே அரசியல் தலைவராகவும் இருக்கிறாரென்றால் அது ஜான்பாண்டியனை தவிர வேறு யாரு? 

சாதாரண பேச்சு வழக்கில் மட்டுமல்ல, மேடையேறி மைக்கைப் பிடிக்கும் போதும் கூட மனிதர் அதிரடியாய்தான் பொளந்து கட்டுவார். ‘ஏலேய் இந்த ஜே.பி. யாரு தெரியுமாலே?’ என்று அவர் கம்பு சுற்ற ஆரம்பித்தால் கச்சேரி களைகட்டும். 

இரண்டு பெரிய திராவிட கட்சிகளில் ஏதோ ஒரு பக்கம் நின்று எதிரணியை தாக்கிப் பேசுவதும், பின் அடுத்த தேர்தலில் அப்படியே நேரெதிராய் மாறுவதும் அவருக்கு வழக்கம். ஆனால் இந்த முறை ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. என்று இந்துத்வ பக்கம் வீசுகிறது ஜே.பி.யின் கொடி. 

அதை மெய்ப்பிக்கும் விதமாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இரண்டையும் போட்டுத் தாக்குகிறார் இப்படி...”கேரளாவுல முதல்வர் பினராயி விஜயன் தன்னோட சொத்து மதிப்பை வெளியிட்டிருக்கார். அவரை மாதிரி இங்கே ஒருத்தராச்சும் வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா சொல்லுங்க! நம்ம அமைச்சர்கள் எல்லாரும் சாதாரண குடும்பத்துல இருந்து வந்தவங்கதான். ஆனா இன்னைக்கு எல்லார் கையிலேயும் ஏகப்பட்ட சொத்துக்கள். எப்படி வந்துச்சு இதெல்லாம்? தலைமை சரியா இருந்தா இது நடக்குமா? தலைமை கண்டிப்பு இல்லை, அதனாலதான் எல்லாம் தலைகீழா நடக்குது. 

அட அ.தி.மு.க. மட்டும்தான் இப்படின்னு நினைக்காதீங்க. தி.மு.க.வும் இதே லட்சணம்தான். பொன்முடி, எ.வ.வேலு, ஜெகத்ரட்சகன், ரகுபதி, பாலு இவங்களெல்லாம் வெச்சிருக்கிற காலேஜ்கள் எல்லாம் இவங்க நேர்மையா உழைச்சு சம்பாதிச்சு வாங்கினதா? ஐ.பெரியசாமி ஆயிரக்கணக்கான ஏக்கர் தோட்டங்கள் வெச்சிருக்கார். எந்தப் பணத்தில் வாங்கியது அது, சம்பளப்பணத்திலா? 

ரெண்டு கட்சியுமே இங்கே ஒழுங்கா இல்லாத ஆளுங்கதாம்லே!” என்றிருக்கிறார் தாடியை நீவியபடி.