Asianet News TamilAsianet News Tamil

உலக கோட்டீஸ்வரர்கள் பட்டியலில் ஓ.பி.எஸ்..! இனி அவருடன் ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது- ஜெயக்குமார்

அதிமுக ஆட்சி காலத்தில் வெவ்வேறு துறைகளில் இருந்த பொறுப்புகளை, பெற்றுக்கொண்டு பேராசையுடன் அமைச்சர் பொறுப்பை வகித்தவர் தான் ஓ.பன்னீர்செல்வம் என முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
 

Jeyakumar has criticized O. Panneer Selvam as a collection king
Author
First Published Aug 30, 2022, 2:31 PM IST

பதவி ஆசை பிடித்தவர் ஓபிஎஸ்

சென்னை ராயபுரம் தொகுதிக்குட்பட்ட ஸ்ரீ தேன் விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெயக்குமார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார.  தமிழகத்தில் திமுக அரசு சர்வாதிகார போக்குடன் செயல்பட்டு வருவதாக விமர்சித்தார். கஞ்சா, குட்கா,  போன்ற போதை பொருட்கள் விற்பனை அதிகமாக இருப்பதாகவும்,  போதைப்பொருட்களை விற்பனை செய்ய லஞ்சம் பெற்றுக்கொண்டு காவலர்கள் தடுக்காமல் அமைதியாக இருப்பாதாக குற்றம்சாட்டினார். தமிழகத்தில் காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டுள்ளதால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருப்பதாகவும் தெரிவித்தார்.  பதவி ஆசை கொண்டவராக இருந்த ஓ. பன்னீர்செல்வம், அதிமுக ஆட்சி காலத்தில் வெவ்வேறு துறை அமைச்சர்களிடம் இருந்து அவருக்கு தேவையான துறைகளை பிரித்து எடுத்துக் கொண்டு செயல்பட்டதாக விமர்சித்தார். வியாசர்பாடி கேபி பார்க் குடியிருப்பு கட்டப்பட்டதில் அதிக அளவில் கமிஷன் பெற்றதாலயே, தரமற்ற குடியிருப்புகள் கட்டப்பட்டதாகவும் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார். 

இன்னல்களை எல்லாம் பொடிப் பொடியாக்கும் கணபதியே...! விநாயகர் சதூர்த்தி வாழ்த்து தெரிவித்த இபிஎஸ்

Jeyakumar has criticized O. Panneer Selvam as a collection king

வசூல் ராஜா ஓபிஎஸ்

அதிமுக ஆட்சியில் வேறு எந்த துறையிலும் ஊழல் குற்றச்சாட்டு எழுப்பப்படாமல் இருந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் துறையில் மட்டும் ஊழல் புகார் சொல்லப்பட்டதற்கு அதுவே காரணம் என கூறினார். உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் பன்னீர்செல்வம் இருப்பதாக குறிப்பிட்ட அவர், வசூல்ராஜா எம்பிபிஎஸ் போல், வசூல்ராஜா பன்னீர் செல்வம் என குறிப்பிட்டார். துரோகம் செய்வதில் கைதேர்ந்தவர் ஓபிஎஸ் எனவும் விமர்சித்தார்.  தேனியில் ஓ.பன்னீர் செல்வத்தின் பண்ணை வீட்டில் நடத்திய ஆலோசனையில் 50 பேர் மட்டுமே கலந்து கொண்டதாகவும்,ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து 10 முதல் 15 பேர் மட்டுமே பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக இருப்பதாக கூறினார். தேர்தலை இணைந்து சந்திக்கலாம் என டிடிவி தினகரன் கூறிய கருத்திற்கு பதில் அளித்த அவர், டிடிவி, சசிகலாவுடன் எப்போதும்  ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

தமிழக அரசின் முடிவுக்கு பல்கலைக்கழகங்கள் கட்டுப்பட வேண்டும்.! ஆளுநருக்கு செக் வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

 

Follow Us:
Download App:
  • android
  • ios