Asianet News TamilAsianet News Tamil

jewelry loan: நகைக்கடன் தள்ளுபடி.. மீண்டும் ஒரு வாய்ப்பு .. அட்டகாசமான அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்.!

சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால், கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட, 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தது. அதன்படி, ஆட்சி அமைத்ததும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை அடகு வைத்து பெற்ற நகைக் கடன்களை தள்ளுபடி செய்ய முதல்வர் உத்தரவிட்டார். 

Jewelry loan discount .. will be given a chance again .. Minister Periyasamy
Author
Tamil Nadu, First Published Dec 30, 2021, 7:50 AM IST

தமிழக அரசின் குடும்ப அட்டை மற்றும் ஆதார் விவரங்களை சரியாக அளிக்க இயலாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு, அவை சரிபார்க்கப்பட்டு, ஆய்வு அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி விளக்கமளித்துள்ளார்.  

சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால், கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட, 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தது. அதன்படி, ஆட்சி அமைத்ததும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை அடகு வைத்து பெற்ற நகைக் கடன்களை தள்ளுபடி செய்ய முதல்வர் உத்தரவிட்டார். 

Jewelry loan discount .. will be given a chance again .. Minister Periyasamy

இதற்கிடையில், அரசின் நகைக்கடன் தள்ளுபடி சலுகையை பெற, ஒரே குடும்பத்தை சேர்ந்த சிலர் கூட்டுறவு வங்கிகளின் வெவ்வேறு கிளைகளில் கடன் பெற்றுள்ளனர். மற்ற பலர் போலி நகைகளை அடகு வைத்தும் கடன் பெற்றுள்ளனர் என புகார்கள் எழுந்தன. இதையடுத்து, கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்டு, நிலுவையில் உள்ள அனைத்து நகைக் கடன்களையும் ஆய்வு செய்ய கூட்டுறவு துறை உத்தரவிட்டது. அதன்படி, ஒரு மாவட்ட அதிகாரிகள், வேறு மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு நடத்தினர்.

Jewelry loan discount .. will be given a chance again .. Minister Periyasamy

அத்துடன் நகைக்கடன் தள்ளுபடி சலுகை பெறும் பயனாளிகளை தேர்வு செய்ய, பல்வேறு நிபந்தனைகளையும் அரசு விதித்தது. அதன்படி, பயிர்க்கடன் தள்ளுபடி சலுகை பெற்றவர்கள், அரசு ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினர், கூட்டுறவு சங்க ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நகைக் கடன்களுக்கு தள்ளுபடி சலுகை கிடையாது என தெரிவிக்கப்பட்டது. மேலும், ரேஷன் கார்டு, ஆதார்எண்ணை வழங்காதவர்கள், தவறாக வழங்கியவர்கள் என மேலும் பலரும் தள்ளுபடி சலுகை பெற தகுதி இல்லாதவர்கள் என தெரிவிக்கப்பட்டது. 

மொத்தம் கூட்டுறவுத்துறையின் புதிய பட்டியலின் படி 48 லட்சத்து 84 ஆயிரத்து 726 நகை கடன் விவரங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு, அதில் 35 லட்சத்து 37 ஆயிரத்து 693 பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. நகை கடன்கள் சலுகைக்கு தகுதியானவர்கள் 13.47 லட்சம் பேர் மட்டுமே இடம் பெற்றது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

Jewelry loan discount .. will be given a chance again .. Minister Periyasamy

இது தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி விளக்கமளித்துள்ளார். அதில், தமிழகத்தில் கடந்த ஆட்சியில் நகைக்கடன்கள் மூலம் கோடிக்கணக்கில் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. நகைக்கடன் தள்ளுபடியில் உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்பதே அரசின் நோக்கம். 48.84 லட்ச நகைக்கடன்களில் 7,65 லட்ச கடன்கள் 40 கிராமிற்கு மேலானவை, 21.63 லட்ச கடன்கள் ஒரே குடும்ப அட்டையில் உள்ளவர்கள் 40 கிராமிற்கு மேல் பெற்றுள்ளனர். மீதமுள்ள 2.20 லட்ச கடன்கள் முறைகேடாக பெறப்பட்டுள்ளன. 15.2 லட்ச கடன்களில் விதிமீறல்கள் நடந்துள்ளன. 

22,52,226 கடன்தாரர்களில் தற்போது 10,18,066 கடன்கள் தள்ளுபடிக்கு தகுதியானவை என தெரிவித்துள்ளார். குடும்ப அட்டை மற்றும் ஆதார் விவரங்களை சரியாக அளிக்க இயலாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு, அவை சரிபார்க்கப்பட்டு, ஆய்வு அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios