ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ஜெகஜீவன் ராம் புகைப்படத்திற்கு மலர் துவி மரியாதை செய்த புகைப்படத்தை போலியாக சித்தரித்து  காமராஜரின் பிறந்த நாளுக்கு மலர் தூவி மரியாதை செய்ததாக தவறான செய்திகள் பரவி வருகின்றன.

பெருந்தலைவர் காமராஜரின் 117 ஆவது பிறந்த நாள் விழா, தமிழகம் முழுவதும்  கொண்டாடப்பட்டது. தமிழக அரசின் சார்பில் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அதேபோல் தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் போன்றவற்றிலும் காமராஜரின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அவரது சொந்த ஊரான விருதுநகரில் நாடார் மகாஜன சங்கம் சார்பில் இரண்டு நாட்கள் கொண்டாடப்பட்டது, இதில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.டி. ராஜேந்திரபாலாஜி, க.பாண்டியராஜன் மற்றும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஆகியோர் பங்கேற்கின்றனர். 

கடந்த ஜூலை 6ம் தேதி சனிக்கிழமையன்று குண்டூர் மாவட்டம் தேடப்பள்ளி சென்ற ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, அங்கு மறைந்த பாபு ஜெகஜீவன் ராம் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். அந்த புகைப்படத்தை எடுத்து, இவர்களாகவே காமராஜ் படத்திற்கு மரியாதை செலுத்தியது போல, போலியாக சித்தரித்து பகிர்ந்திருக்கிறார்கள்.