j.deepa who is not a member of the Supreme Court has joined the twin leaf case.

அதிமுகவில் உறுப்பினரே இல்லாத ஜெ.தீபா இரட்டை இலை வழக்கில் இணைந்துள்ளார். கட்சி உறுப்பினராக இல்லாத ஜெ.தீபாவின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக பிரிந்ததால் இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது. 

இதையடுத்து சசிகலா அணியும் ஒபிஎஸ் அணியும் தங்களுக்கே கட்சியும் சின்னமும் சொந்தம் என்று தேர்தல் ஆணையத்தில் பிரமான பத்திரங்கள் தாக்கல் செய்தனர். இதனிடையே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பெரும்பான்மையான அதிமுகவினர் தனக்கே ஆதரவு தெரிவிப்பதாகவும் எங்களுக்கே சின்னத்தை ஒதுக்க வேண்டும் எனவும் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தார். ஆனால் சின்னம் யாருக்கும் ஒதுக்கப்பட வில்லை. 

அச்சமயம், சசிகலா தரப்பில் பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால் ஒபிஎஸ் க்கு 12 எம்.எல்.ஏக்களே ஆதரவு தெரிவித்தனர். 

இந்நிலையில், அதிமுகவின் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் அணி மற்றும் தினகரன் அணி ஆகியோரிடம் ஏழு கட்டங்களாக விசாரணையை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதாவது இரட்டை இலை சின்னமும் கட்சியும் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிக்கே என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

அதில், செப். 12 ஆம் தேதி நடைபெற்ற சென்னை பொதுக்குழு தீர்மானத்திற்கு 1877 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

தினகரன் தரப்புக்கு 6 எம்.பிக்கள், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேர் உட்பட 20 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் எடப்பாடி அணிக்கு 111 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

பொதுக்குழு உட்பட அனைத்து அமைப்புகளிலும் எடப்பாடி - பன்னீர் அணிக்கே பெருன்பான்மை உள்ளது. 

மக்களவையில் எடப்பாடி அணிக்கு 34 பேரும் டிடிவி அணிக்கு 3 பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மாநிலங்களைவையில் எடப்பாடி அணிக்கு 8 பேரும் டிடிவி அணிக்கு 3 பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

மதுசூதனன் தலைமையிலான அணியே இரட்டை இலையை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் அதிமுகவில் உறுப்பினரே இல்லாத ஜெ.தீபா இரட்டை இலை வழக்கில் இணைந்துள்ளார். கட்சி உறுப்பினராக இல்லாத ஜெ.தீபாவின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.