காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் எம்.எல்.ஏக்கள் 14 பேர் ஒரே நேரத்தில் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளதால்  கர்நாடகாவில் விரைவில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கவிழும் நிலை  ஏற்பட்டுள்ளது. 

கர்நாடகா சட்டசபையில் காங்கிரஸ் 78, ஜேடிஎஸ் 37 எம்.எல்.ஏக்கள், பாஜகவுக்கு மொத்தம் 105 எம்.எல்.ஏக்கள் உள்ள நிலையில் தற்போது 14 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் குமாரசாமி அரசு எந்த நேரத்திலும் கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கர்நாடகாவில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது. 

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணியில்  ஆட்சி செய்தே வருகிறார் குமாரசாமி, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல்லில் பிஜேபி பெரும்பான்மையோடு மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. 

அதாவது, சமீபத்தில் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்ற ராகுல் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே அதிருப்திகள் நிலவியது.  

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து திடீரென 2 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது காங்கிரஸ் மற்றும் மத்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் 14 எம்.எல்.ஏக்கள் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்த அவர்கள் தற்போது ஆளுநரை சந்திக்க சென்றுள்ளனர்.

ஆனந்த்சிங், ரமேஷ் ஜார்கிஹோளி ஆகியோர் ஏற்கனவே சபாநாயகர் அலுவலகத்தில் ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர். ஆனால் ராஜினாமா கடிதம் தனக்கு கிடைக்கவில்லை என்று சபாநாயகர் கூறினார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 8 எம்எல்ஏக்கள் திடீரென ராஜினாமா செய்தனர். ஆனால், பிசி பாட்டில் மொத்த 14 எம்.எல்.ஏக்கள் கடிதம் கொடுத்ததாக கூறியுள்ளார்.