சென்னை கொடுங்கையூரில் கடந்த சில நாட்களுக்கு முன் சிப்ஸ் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், 40க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். தீயணைப்பு வீரர் உள்பட 8க்கு மேற்பட்டோர் இறந்தனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மேற்கண்ட விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கும் விழா தற்போது, கொடுங்கையூர் பகுதியில்  நடந்து வருகிறது.

இதில் முதல்வர் எடப்பாடி அணியை சேர்ந்த அமைச்சர் ஜெயகுமார், டிடிவி.தினகரன் அணியை சேர்ந்த எம்எல்ஏ வெற்றிவேல் ஆகியோர் கலந்து கொண்டு, பாதிக்கப்பட்டோர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கினர். இதை கண்ட அதிமுகவினர் ஆச்சர்யம் அடைந்தனர்.

கடந்த சில நாட்களாக அமைச்சர் ஜெயகுமார், சசிகலா மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிடிவி.தினகரனின் ஆதரவாளர் எம்எல்ஏ வெற்றிவேல், பதில் அறிக்கை விடுத்து வருகிறார். இதனால், அதிமுகவில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், கொடுங்கையூர் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி, இன்று நடந்து வருகிறது. இதில் எடப்பாடி அணியை சேர்ந்த அமைச்சர் ஜெயகுமாரும், டிடிவி.தினகரன் ஆணியை சேர்ந்த எம்எல்ஏ வெற்றிவேலுவும் ஒரே மேடையில் கலநது கொண்டு பேசியது ஆர்ச்சர்யத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து டிடிவி.தினகரன் தரப்பினர் கூறுகையில், விபத்து நடந்த கொடுங்கையூர் பகுதி, பெரம்பூர் தொகுதியில் அடங்கியுள்ளது. இதனால், தனது தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைப்பதற்க, எம்எல்ஏ வெற்றிவேல் போராடியுள்ளார். இதையொட்டி அந்த விழாவில் அவர் கலந்து கொண்டார்.

அதேபோல் அமைச்சர் என்ற முறையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமைச்சர் ஜெயகுமார் கலந்து கொண்டு, நிதி உதவி வழங்கினார்.