சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கை விசாரித்த 4 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பால்துரைக்கு தற்போது கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் ஜெயராஜ்- பென்னிக்ஸ் கொலை வழக்கை விசாரணை செய்ய 8 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் கடந்த 10 ஆம் தேதி டெல்லியில் இருந்து மதுரை வந்தனர். அவர்கள் சாத்தான்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதலில் கைது செய்யப்பட்ட 5 காவலர்களிடம் விசாரணை மேற்கொண்ட அவர்கள் அதன் பின்னர் மேலும் 3 காவலர்களிடம் விசாரணை நடத்தினர். இதனிடையே நேற்று முன்தினம் 2 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனைதொடர்ந்து அனைத்து அதிகாரிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மேலும் 2 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா உறுதியானது.

இந்நிலையில் தற்போது வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பால்துரைக்கு தற்போது கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கில் விசாரணை செய்யப்பட்டோர் வழக்கில் தொடர்புடையவர்கள் அச்சத்தில் உள்ளனர்.