அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று திறக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலையில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலை, அவரது பிறந்தநாளான நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டது. இதனை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் திறந்து வைத்தனர். 

இந்த நிலையில், அதிமுக அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் சிலை, அவரைப்போலவே இல்லை என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றன. 

அதிமுக தலைமை அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் சிலை, இந்த சாயலில் உள்ளது! அவரைப்போல் உள்ளது! என்று விமர்சனம் செய்து வருகின்றனர். 

அதிமுக தலைமை அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் சிலை, இந்த சாயலில் உள்ளது! அவரைப்போல் உள்ளது! என்று விமர்சனம் செய்து வருகின்றனர். இது குறித்து நேற்று கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், ஜெ.வின் சிலையை வளர்மதி போன்றோருடன் ஒப்பிடுகிறார்கள். மனசாட்சி இல்லாத மிருகங்கள்தான் ஜெ.வின் புதிய சிலையை விமர்சிப்பார்கள் என்று கடுமையாக கூறியிருந்தார். இந்த நிலையில்
ஜெயலலிதாவின் சிலையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக இன்று ஜெயக்குமார் கூறியுள்ளார். 

அமைச்சர் ஜெயக்குமார், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் சிலையில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று கூறினார். இதற்காக சிலையை செய்த ஸ்தபதி மீண்டும் அழைக்கப்பட உள்ளார்.