மேடைக்கு மேடை சமூக நீதி என பற்றி வாய்கிழிய பேசும் திமுக, என்றைக்கும் தாழ்த்தப்பட்டவர்களை, தாழ்த்தப்பட்டவர்களாகத்தான் வைத்திருந்தது என அதிமுக நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார். அது அரசியலிலும் சரி , தனிப்பட்ட வாழ்விலும் சரி.

இது தொடர்பக அதிமுக நிர்வாகி கூறுகையில் தன் கட்சிக்காரரான தனபாலை ( தற்போதைய சபாநாயகரை ) தேர்தல் சமயத்தில் சாதியின் பாகுபாட்டினால், கட்சிக்காரர்கள் அவர் வீட்டில் சாப்பிட மறுத்தததாக கேள்வி பட்ட அம்மா அவர்கள், அந்த தேர்தலில் அவர் ஜெயித்தபின் அவரை மாநிலத்துக்கே உணவிடும் உணவுத்துறை அமைச்சராக்கி அழகு பார்த்தார். தற்போது கூட 2016 தேர்தலில் தனபால் அவர்கள் ஜெயித்தபிறகு, தான் உட்பட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தும் வானளாவிய அதிகாரம் கொண்ட சட்டப்பேரவை சபாநாயகராக்கி வணங்கி மரியாதை செய்து அழகு பார்த்தார்.

இதுதான், உண்மையான சமூக நீதி, உள்ளொன்றும் புறமொன்றும் பேசி திரியாதவர் அம்மா. பெரம்பலூர் தொகுதி, பொது தொகுதியாக அறிவிக்கப்பட்டவுடன், சொந்த மண்ணின் மைந்தனான ராசாவை , கருணாநிதி நீலகிரி தனி தொகுதிக்கு அனுப்பி வைத்து தலித்திய சமூக நீதியை நிலைநாட்டி கொண்டிருந்தபொழுது, அதற்க்கு முன்னரே , திருச்சியை சேர்ந்த தலித் எழில்மலை என்னும் தாழ்த்தப்பட்டவரை திருச்சி பொது தொகுதியில் நிற்கவைத்து பெரும் வெற்றியை பெற்றுக்கொடுத்து சத்தமே இல்லாமல் சமூக நீதியை செய்திருந்தார். திராவிட இயக்கத்தின் அடிநாதமே பார்ப்பனிய எதிர்ப்பு தான். 

அப்பேற்பட்ட திராவிட இயக்கத்திற்கு ஒரு பார்ப்பனிய பெண்மணியே தலைவியாக வந்து, எந்த திராவிடனும் செய்யாத, இனியும் செய்யமுடியாத 69 சதவீத இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி காலத்தால் அழிக்க முடியாத வரலாற்று சட்டமாக வைத்துவிட்டு போனார் அந்த பார்ப்பன பெண்மணி  “அம்மா ஜெயலலிதா” முரண்பாடுகளை பேசாமல், முரண்பாடுகளை உடைத்தெறிந்து வெற்றி பெறுபவர்கள் எல்லாருக்கும் அம்மா ஜெயலலிதா தான் ஆரம்பம்.

கீழே உள்ள படத்தில் இருக்கும் உண்மை தன்மை தெரியும், பார்பனரான அம்மா, சக பார்பனரான, சக பெண்மணியான தற்போதைய  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அமர வைத்திருப்பதும், தாழ்த்தப்பட்டவரான, திருமாவளவனை அமர வைத்திருப்பதும். எத்தனை முறை திருமாவளவன் அவர்களுடன் கூட்டணி முறிவு ஏற்பட்டிருந்தாலும், ஒருமுறை கூட தடித்த வார்த்தை சொல்லி பேசியதில்லை அம்மா அவர்கள்.

ஆனால், திமுகவில் அறிவாலய வாட்ச்மன் முதற்கொண்டு, துரைமுருகன் மாதிரியான ஆட்கள் வரை திருமாவளவனை லெப்ட் ஹாண்டில் தான் டீல் பண்ணுவானுங்க. கடந்த நாடாளுமன்ற தேர்தல்ல கூட திருமாவளவன் எத்தனை ஓட்டுல ஜெயிச்சாருன்னு ஊருக்கே தெரியும், காலனி பகுதிகளை தவிர, ஒரு பொது தொகுதி வார்டுல கூட திருமாவளவனை பிரச்சாரத்துக்கு கூட அனுமதிக்கவில்லை என்பதுதான் வரலாறு. 

அதேபோல், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட சென்னை உயர்நீதிமன்றத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் நீதிபதிகளாக வந்தது திமுக போட்ட பிச்சை என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. அதேபோல, தலைமை செயலாளர் சண்முகத்தை சந்தித்தபோது அவர் தங்களை அவமானப்படுத்தி விட்டதாகவும், மரியாதை குறைவாக நடத்தியதாகவும் திமுக எம்.பி.க்கள் குழுத்தலைவர் டி.ஆர்.பாலு கடும் கோபத்தை வெளிப்படுத்தினர். 

இந்தக்குழுவில் இடம் பெற்றிருந்த தயாநித மாறன் தலைமை செயலாளர் எங்களை மூன்றாம் தர  மக்களைப்போல் நடத்தினார். அந்த வார்த்தையை வாயில் சொல்ல முடியவில்லை. நாங்கள்  தாழ்த்தப்பட்ட மக்களா? என்றார். தயாநிதி மாறனின் இந்த பேச்சு கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் தனது டுவிட்டர் பதிவில், தலைமை செயலாளர் குறித்து திமுக எம்.பி.க்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்திய சரி. ஆனால், நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களா என்றதும் அதிர்ச்சியளிக்கிறது. அதில் உள்நோக்கம் இல்லை என்றாலும், இம்மண்ணின் மைந்தர்களின் உள்ளத்தை பாதித்திருக்கிறது என்று அதிருப்தியை வெளிப்படுத்தினார். பகுத்தறிவு , சமூக நீதி எல்லாம் பேசுறதுக்கு திமுகவுக்கு எந்த அருகதையும் கிடையாது.