இன்றைக்கு ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் பிரதமராகி இருப்பார் என பழம்பெரும் நடிகை சரோஜா தேவி தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதா என்னிடம் நன்றாகப்பழகுவார். நான் எப்போது சென்னை வந்தாலும் அவரது வீட்டிற்கு போவேன். அவர் உயிரோடு இருந்திருந்தால் இப்போது பிரதமராக இருந்திருப்பார். எங்கள் குரு ஒருவர் இருக்கிறார். அவரை சந்தித்தபோது ‘ஜெயலலிதாவிடம் நாங்கள் போக முடியாது. நீங்கள் போனால் எங்கள் பகுதிக்கு காலேஜ் வேண்டும். கொஞ்சம் சொல்ல முடியுமா எனக்கேட்டார்.

 

சென்னைக்கு வந்தேன். ஜெயலலிதா என்னிடம் கன்னடத்தில் தான் பேசுவார்.  கம்பத்தில் ஒரு கல்லூரி வேண்டும் எனக்கேட்டேன். ‘ அவர் கம்பம். மதுரையில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. அங்கே எல்லாம் ஏலக்காய் தோட்டம் தான் இருக்கிறது. கல்லூரி எல்லாம் ஒன்றும் இல்லை’ என அவரே எல்லாவற்றையும் சொல்லி விட்டார். அவருக்கு மெமரி பவர் அதிகம்’’ எனத் தெரிவித்துள்ளார்.