Asianet News TamilAsianet News Tamil

சசிகலா - இளவரசிக்கு பேரதிர்ச்சி... ஜெயலலிதாவோடு முடிந்தது எல்லாமே..!

பெங்களூரு சிறையில் இருந்து வரும் சசிகலா, அவருடைய உறவினர் இளவரசி ஆகியோரது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. 
 

Jayalalithaa is all over sasikala
Author
Tamil Nadu, First Published Jul 13, 2019, 5:02 PM IST

பெங்களூரு சிறையில் இருந்து வரும் சசிகலா, அவருடைய உறவினர் இளவரசி ஆகியோரது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

 Jayalalithaa is all over sasikala

மறைந்த முன்னாள் முதல்வர் செயலலிதாவுடன் இவர்கள் இருவரும் போயஸ் கார்டன் பகுதியில் வசித்து வந்தனர். ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்ல முகவரியிலேயே சசிகலா, இளவரசி ஆகியோர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருந்தது. 2016 சட்டசபை தேர்தலின்போது ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வாக்குச்சாவடிக்கு ஜெயலலிதாவுடன் இருவரும் சென்று வாக்களித்து வந்தனர்.Jayalalithaa is all over sasikala

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வந்தது. இதில் சசிகலா, இளவரசி ஆகியோருக்கும் தலா 4 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து 2017 பிப்ரவரி மாதம் முதல் 2 பேரும் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் போது சசிகலா, இளவரசி ஆகியோர் போயஸ் கார்டன் இல்லத்தில் இல்லை. எனவே, 2 பேரின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.Jayalalithaa is all over sasikala

தற்போது ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை அரசு நினைவகமாக மாற்றும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இப்போது இந்த இல்லத்தில் யாரும் வசிக்கவில்லை. மக்களவை தேர்தலை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. சென்னை மாநகராட்சி டிவி‌ஷன் 18-ல் போயஸ் கார்டன் இல்ல முகவரி உள்ளது. இதிலும் சசிகலா, இளவரசி ஆகியோர் பெயர்கள் இடம் பெறவில்லை. வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios