மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்த போது செய்தியாளர்களிடம் பேசிய மதுசூதனன், பொன்னையன், சி ஆர் சரஸ்வதி உள்ளிட்டோர் ஜெயலலிதா நன்றாக இருக்கிறார் இட்லி சாப்பிட்டார் என மருத்துவமனயி வாசலில் வந்து ஒய்யாரமாக சொன்னதெல்லாம் பொய் என்று தகவல் வெளியாகியுள்ளது.  அதுமட்டுமலாமல், ஜெ., சிகிச்சை பெற்று வந்த போது பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், ஓபிஎஸ், தம்பித்துரை ஆகியோர் பலமுறை பார்த்தனர் என்ற தகவலையும் என்று ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில் சசிகலா கூறியுள்ளார்.

 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதியன்று உடல்நலக்குறைவினால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி டிசம்பர் 5ஆம் தேதியன்று மரணமடைந்தார். அப்பல்லோவில் சிகிச்சையில் இருந்த  75 நாட்களும் யாரையுமே சசிகலா பார்க்க விடவில்லை என்றும் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் ஓபிஎஸ் இந்த மர்ம மரணத்தை விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கவேண்டும் என தர்மயுத்தம் நடத்தினார். இதனையடுத்து ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை விசாரிக்க முதல்வர் பழனிச்சாமி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணைக்கமிஷன் அமைத்து உத்தரவிட்டார். ஜெயலலிதாவுக்கு நெருங்கியவர்கள், அமைச்சர்கள், சசிகலா குடும்பத்தினர் இந்த ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்து வருகின்றனர். 

ஜெ., மரணம் பற்றி விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் இதுவரை சசிகலா நேரில் ஆஜராகவில்லை ஆனால் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில், ஜெயலலிதா மனநிக்கும் முன்பாக ஜெயலலிதா கடும் மன அழுத்தத்தில் இருந்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு விடுவோமா என்ற வேதனை அவருக்குள் இருந்தது. அதுவே அவரது உடல்நிலையை அதிகமாக பாதித்தது என சசிகலா கூறியுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு பெங்களூரு சிறையில் இருந்த போது ஜெயலலிதாவிற்கு மனதளவில் வேதனை அதிகரித்தது. ரத்த சர்க்கரை அளவும் அதிகரித்தது. விடுதலையாகி வந்த பின்னரும் தொடர்ந்தது மன வேதனையில் இருந்தார். இதனையடுத்து  ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிட தீர்மானித்தார்.

மேலும் அதில், கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தல் வெற்றிக்குப் பிறகும் ஜெயலலிதா உடல் பாதிக்கப்பட்டது. நீரிழிவு மருத்துவர், தோல்நோய் மருத்துவர்கள் பரிசோதனை செய்து குறைந்த அளவிலான ஸ்டீராய்டு மாத்திரைகளை கொடுத்தனர். செப்டம்பர் 16ஆம் தேதி வரை மாத்திரை சாப்பிட்டு வந்தார். இதனையடுத்து 19ஆம் தேதியன்று காய்ச்சல் வந்தது இரண்டு நாட்களுக்குப் பிறகு செப்டம்பர் 21ஆம் தேதியே உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. அவரிடம் மருத்துவமனைக்கு செல்லலாம் என சொன்னதும் மருத்துவமனைக்கு அழைத்தும் வர மறுத்தார். 22ஆம் தேதியன்று அவர் மிகவும் சோர்வாக காணப்பட்டார். இரவு 9.30 மணியளவில் உடல்நிலை மோசமானது இந்நிலையில்,  எனது உறவினர் டாக்டர் சிவகுமாருக்கு போன் செய்தேன். அவர் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் டாக்டர் விஜயகுமார் ரெட்டிக்கு போன் செய்து இரண்டு ஆம்புலன்ஸ்களை வரவழைத்தார். உடனடியாக ஆம்புலன்ஸில்  மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம் என்று சசிகலா கூறியுள்ளார். 

ஜெயலலிதாவை பார்த்தது யார்? யார்?

அப்பல்லோவில் சிகிச்சையின்போது ஜெயலலிதாவை அப்போது அமைச்சராக இருந்த ஓபிஎஸ், மக்களவையில் துணை சபாநாயகர் தம்பித்துரை பார்த்தனர்.  அப்போது  ஆளுநர் வித்யாசாகர் ராவும் பார்த்தார் என்றும் சசிகலா குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதாவின் உடல்நிலை சரியான பின்னரும் சில தினங்கள் மருத்துவமனையில் ஓய்வெடுக்க சொன்னார்கள் என சசிகலா தனது பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதாவிற்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், கைரேகை பதிவு பெற்ற டாக்டர் பாலாஜி, எம்பார்மிங் செய்த டாக்டர் உள்ளிட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. ஜெயா டிவி CEO விவேக் கடந்த வாரம் விசாரணையில் ஆஜரான அவர் மருத்துவமனையில் தாம் ஜெயலலிதாவை பார்க்கவில்லை எனவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது தாம் வெளிநாட்டில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.  

அதேபோல, ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என்று கூறியது எல்லாம் சுத்தப் பொய். அவரை யாரும் பார்க்கக்கூட அனுமதிக்கப்படவில்லை. அதே போல சி.ஆர்.சரஸ்வதி, பொன்னையன் மற்றும் மதுசூதனனும் என யாருமே ஜெயலலிதாவை பார்க்கவில்லை என ஆறுமுகம் சாமி ஆணையத்தில் சசிகலா அளித்துள்ள வாக்குமூலம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.