மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் உடல்நலம் பெற்று மக்கள் பணியாற்றுவார் என நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 28 நாட்கள் ஆன நிலையில் ஜெயலலிதாவுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களும், சென்னை அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களும் இணைந்து சிகிச்சை அளித்த வருகிறார்கள். தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணரான லண்டனைச் சேர்ந்த மருத்தவர் ரிச்சர்டு ஜான் பீலே ஆலோசனை வழங்கி வருகிறார்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து கேட்டறிய பல்வேறு கட்சி தலைவர்கள், அப்போலோ மருத்துவமனை சென்ற வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில், நடிகர் ராதாரவி, ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து அறிவதற்காக அப்போலோ மருத்துவமனைக்கு சென்று, அவரின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ராதாரவி, முதலமைச்சர் உடல்நலம் குறித்து அமைச்சர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டதாக கூறினார். மேலும், முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் உடல் நலம் பெற்று மக்கள் பணியாற்றுவார் என்றும் ந்டிகர் ராதாரவி கூறினார்.