முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22ம் தேதி திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர், சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும், சிங்கப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு பிசியோதெரபி பெண் நிபுணர்களும் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளிக்கின்றனர்.

இதுகுறித்த அறிக்கைகளை, அடிக்கடி அப்பல்லோ மருத்துவமனை மருத்துவமன வெளியிட்டு வந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக அறிக்கை எதையும் அப்பல்லோ மருத்துவமனை வெளியிடவில்லை. இதற்கிடையில் முதலமைச்சர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, அதிமுகவினர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதா, சைகை மொழியிலும், உடல் அசைவு மொழியிலும் பேசுகிறார். தானாகவே எழுந்து உட்கார்ந்து, உணவை சாப்பிடுகிறார் என அதிமுக மூத்த நிர்வாகிகள் பேட்டியில் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே மீண்டும் சென்னை வருகிறார். அவர் முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை, அதில் மாற்றம் தேவையா என்பது குறித்து அப்பல்லோ டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். அதன்பிறகு, முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் மாற்றம் ஏற்படலாம் என கூறப்படுகிறது.