Asianet News TamilAsianet News Tamil

கிழித்தெறிவதில் எனக்கு ஜெயலலிதாதான் ரோல்மாடல்... திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் அதிரடி விளக்கம்..!

அதிமுக அரசு சட்டம் ஒழுங்கில் முதலிடம் பெற்றதாக முதல்வர் தெரிவித்தார். மத்திய பாஜகவுக்கு அடிமையாக இருப்பதற்காக இந்த அங்கீகாரமா? ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு முதலிடமா? சட்டம் ஒழுங்கை மீறிப் பேசியதாக நெல்லை கண்ணனை கைது செய்தீர்களே அதற்கு முதலிடமா? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். 

Jayalalitha Rollmodel...DMK MLA j anbazhagan Explanation
Author
Tamil Nadu, First Published Jan 7, 2020, 3:56 PM IST

அன்று பட்ஜெட் உரையின் போது முதல்வர் கருணாநிதி முன்பு கிழித்தெறிந்தவர் ஜெயலலிதா. நான் இன்று ஆளுநர் உரையைக் கிழித்ததற்கு அவர்தான் முன்னுதாரணம் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் அதிரடி விளக்கமளித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவையில் 2-வது நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் பேசும்போது குறுக்கிட்ட அமைச்சர் வேலுமணி உட்கார் என்று ஒருமையில் பேசியதாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவை வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெ.அன்பழகன்;- உள்ளாட்சி தேர்தல் நல்லமுறையில் நடைபெற்றிருப்பதாக அமைச்சர்கள் கூறினர். உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நடைபெற்ற முறைகேடுகளைப் பட்டியலிட்டுப் பேசினேன். அதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

Jayalalitha Rollmodel...DMK MLA j anbazhagan Explanation

அதிமுக அரசு சட்டம் ஒழுங்கில் முதலிடம் பெற்றதாக முதல்வர் தெரிவித்தார். மத்திய பாஜகவுக்கு அடிமையாக இருப்பதற்காக இந்த அங்கீகாரமா? ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு முதலிடமா? சட்டம் ஒழுங்கை மீறிப் பேசியதாக நெல்லை கண்ணனை கைது செய்தீர்களே அதற்கு முதலிடமா? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். 

Jayalalitha Rollmodel...DMK MLA j anbazhagan Explanation

மேலும், கல்லூரி வளாகத்திற்குள் குண்டு வீசுவோம் எனப் பேசிய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? உயர்நீதிமன்றத்தை தரக்குறைவாகப் பேசிய அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? பெரியார் சிலையை உடைப்போம் எனச் சொன்ன அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் தொடர்புடைய அ.தி.மு.க பிரமுகரை பிடிக்க வக்கற்றது இந்த அரசு. இதில் சட்டம் ஒழுங்கில் சிறப்பாக செயல்படுவதாகச் சொன்னால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? என்றார். 

இந்த அரசு எதில் முதலிடம்? உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் தினசரி அரசை விமர்சித்து குட்டு வைக்கிறதே. அதில்தான் இந்த அரசு முதலிடம். ஊழலில் முதலிடம். சிறுபான்மையினர் பாதுகாப்பு என அதிமுகவினர் கூறி நாடகமாடுகின்றனர். ஆனால், அ.தி.மு.க-வும் மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரித்து வாக்களிக்காமல் இருந்தால் மசோதா தோற்றுப் போயிருக்கும்.

Jayalalitha Rollmodel...DMK MLA j anbazhagan Explanation

மேலும், சபாநாயகரிடம் பேச 5 நிமிடங்கள் ஆளுநர் உரை மீது பேச வாய்ப்பளிக்கவேண்டும் எனக் கேட்டேன். ஆனால் அவர் அனுமதி வழங்காமல், பேசக்கூடாது எனக் கூறினார். அதனால் தான் ஆளுநர் உரையை சபாநாயகர் முன்பே கிழித்தேன் எனத் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜெ.அன்பழகன், பட்ஜெட் உரையையே அப்போதைய முதல்வர் கருணாநிதி முன்பு கிழித்தெறிந்தவர் ஜெயலலிதா. நான் இன்று ஆளுநர் உரையைக் கிழித்ததற்கு அவர்தான் முன்னுதாரணம் அதிரடி விளக்கம் அளித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios