மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அவரது இல்லமான போயஸ் கார்டனுக்கு கொண்டு செல்லப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா மறைந்த அறிவிப்பு வெளியான 10 நிமிடத்தில் அவரது உடல் போயஸ் தோட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் பர்சனல் பாதுகாப்பு அமைப்பான கோர்செல் அமைப்பு போலீசார் சுமார் 8 மணி அளவில் அப்போலோ
மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டனர். பின்னர் போயஸ் கார்டனும் ஷாமியான போடப்பட்டு தயாரானது. இதனிடையே முதல்வரின் கான்வாய் வாகனங்களும் கொண்டுவரப்பட்டது.
பின்னர் அப்போலோவில் உள்ள தொண்டர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். போலீஸ் முழுதும் குவிக்கப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் ரூட் அலர்ட் எனப்படும் கான்வாய் ரூட் அப்போலோவிலிருந்து கிரீம்ஸ் சாலை , ஆர்கே சாலை போயஸ் கார்டன் வரை வழக்கமாக முதல்வருக்கு போடப்படும் பாதுகாப்பு போடப்பட்டது.
போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு முதல்வருக்குரிய மரியாதையுடன் போலீஸ் பாதுகாப்புடன் அப்போலோவிலிருந்து முதல்வர் ஜெயலலிதா உடல் ஆம்புலன்ஸ் மூலம் அவர் போயஸ் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
வழியெங்கும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்திருந்தனர். கடைசி நேரத்தில் தங்கள் தலைவியின் பூத உடல் செல்லும் வாகனத்தையாவது தொட்டு வணங்கிட வேண்டும் என்று ஆம்புலன்ஸ் வாகனத்தின் முன் முண்டியடித்து விழுந்தனர்.
அவர்களை கட்டுப்படுத்த போலீசாரும் , எப்போதும் முதல்வர் வாகனத்துடன் ஓடி வரும் கம்ண்டோ மற்றும் கோர்செல் வீரர்களும் கடுமையாக கஷ்டப்பட்டனர். பின்னர் மக்கள் வெள்ளத்தை சமாளித்தப்படி ஒருவழியாக மக்கள் வெள்ளத்தில் நீந்தியபடி தனது இறுதிபயணத்தின் ஒரு பகுதியாக உயிரற்ற உடலாக போயஸ் இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டது முதல்வர் உடல்.
கதறியழுத தொண்டர்கள் , கண்ணீர் விட்ட காவல்ர்கள் :
முதல்வர் இல்லத்தை நெருங்கியதும் ஆரவாரத்துடன் முதல்வர் காருடன் ஓடிவரும் பாதுகாவலர் தற்போது உயிரற்ற முதல்வர் உடலுக்கு முன் இப்போது ஓடி வருவதைநினைத்து கண்ணீர் விட்டார். இதே போல் தொண்டர்களும் கதறி அழுதனர்.
போயஸ் இல்லத்தில் முதல்வருக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்ட பின்னர் காலை 10 மணி அளவில் ராஜாஜி மண்டபத்தில் அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
