கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா, ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துவந்த நிலையில், நேற்று இரவு 11.,30 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இதையடுத்து அவரது உடல் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், அங்கிருந்து சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் தோட்டத்தில¢ உள்ளராஜாஜி அரங்கில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அங்கு அரசியல் கட்சித்தலைவர்களும், திரை உலக பிரபலங்களும் அஞ்சலி செலுத்திகின்றனர்.

இதையொட்டி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன், முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், மக்களின் தலைவியாக, தமிழின தலைவியாக திகழ்ந்தவர் ஜெயலலிதா.