முதல்வர் ஜெயலலிதா 68 வயதில் மரணத்தை தழுவியுள்ளார். மரணத்தை சந்திக்கும் வயது அல்ல இது. ஆனால் பரபரப்பான வாழ்க்கை சூழ்நிலை அவரை லட்சோபலட்சம் அதிமுக தொண்டர்களிடமிருந்தும் , தமிழக மக்களிடமிருந்தும் பறித்து சென்றுள்ளது. 

முதல்வர் ஜெயலலிதா இரும்பு பெண்மணி என்று அழைக்கப்பட்டவர். எதையும் திட்டமிட்டு ஆற்றலுடன் அதை கச்சிதமாக நடத்தி காட்டுவார். தேர்தல் பிரச்சார நேரத்தில் மற்ற கட்சிகள் பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் முன்பே வேட்பாளரை அறிவித்து பிரச்சாரத்தை துவக்கி மற்றவர்கள் துவக்கி முடிக்கும் முன்பே இரண்டு மூன்று சுற்று சுற்றிவந்துவிடுவார்.

தமிழகத்தில் அவர் சுற்றாத இடமில்லை எனலாம். ஆனாலும் சமீப காலமாக அவரை கட்டி போட்டது இயற்கை. அவருக்கு இருந்து உடல் உபாதைகளை கூடியவரை வெளிகாட்டி கொள்ளாமல் உறுதியாக இயங்கினார். 

மருத்துவமனைகளை அதிகம் நாடாதவர் ஜெயலலிதா. அவர் அப்போலோவில் அனும்திக்கப்பட்டார் எனபதை கூட யாரும் நம்பவில்லை. ஆனால் முதல்வர் உடல் நிலையை பார்த்து மருத்துவர்கள் நீங்கள் கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும் உடனடியாக சிகிச்சை எடுத்துகொள்ளவேண்டுமென்று கேட்டுகொண்டனர். 

ஆனால் அவரால் பரபரப்பான அரசியல் சூழ்நிலை காரணமாக உரிய சிகிச்சை எடுத்துகொள்ள முடியவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் அவரால் நின்று பேச முடியாத சூழ்நிலை இருந்தது. 

சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு செல்லலாம் என்று திட்டமிட்டிருந்ததாகவும் அதற்காக அவரது தனிச்செயலாளர் இன்னொசண்ட் திவ்யா ஒரு வருட காலம் விடுமுறை எடுத்து அமெரிக்க சென்றார் என்றும் அவரது ஏற்பட்டின் பேரில் , அனைத்து பிரச்சனைகளும் ஓய்ந்த பின்னர் முதலமைச்சராகவே அமெரிக்கா சென்று சில மாதங்கள் முழுமையான ஓய்வுடன் கூடிய சிகிச்சை எடுத்துகொள்ளலாம் என திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. 

ஆனால் அடுத்தடுத்து வந்த பரபரப்பான சூழ்நிலைகள், உள்ளாட்சி தேர்தல் அரசியல் நிகழ்வுகள் அவர் அமெரிக்க செல்வதை தள்ளி போட்டார். பிறகு பார்த்து கொள்ளலாம் என தனது சிகிச்சைக்கான பயணத்தை தள்ளி வைத்தார் என்று கூறப்படுகிறது. 

ஒருவேலை அரசியல் சூழ்நிலையைவிட தனது உடல் நலம் முக்கியம் என முடிவெடுத்திருந்தால் இன்று முதல்வரை இழந்திருக்க 100% சதவிகிதம் வாய்ப்பிருந்திருக்காது. மேலும் பல பத்தாண்டுகள் அவர் இருந்திருக்கலாம். 

பரபரப்பான அடுத்தடுத்து இருந்த அரசியல் நெருக்கடிகள் காரணமாக அவரால் தனது உடல் நிலையை கவனிக்க முடியாமல் போனது தமிழகத்தின் துரதிர்ஸ்டமே.