ஜெயலலிதா நினைவு தினத்தில் அமமுக சார்பில் ஓட்டப்பட்ட போஸ்டரில் விட்டுக்கொடுக்கவும் மாட்டோம். விலகிப் போகவும் மாட்டோம் என சசிகலா, டிடிவி.தினகரன் ஆகியோர் ஜெயலலிதாவை வணங்குவது போல போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், அதிமுக அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். அதேபோல், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட பல்வேறு கட்சியினருடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். சில இடங்களில் போஸ்டர்களும் ஒட்டப்பட்டது.

இந்நிலையில், ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி அமமுக சார்பில் ஓட்டப்பட்ட போஸ்டர்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டரில், `விட்டுக்கொடுக்கவும் மாட்டோம். விலகிப் போகவும் மாட்டோம் என சசிகலா, டிடிவி.தினகரன் ஆகியோர் ஜெயலலிதாவை வணங்குவது போல போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. சசிகலா அடுத்த மாதம் விடுதலையாகக்கூடும் என்று கூறப்படும் நிலையில், இந்த போஸ்டரில் எழுதப்பட்டிருக்கும் வசனங்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. 

அமமுகவின் இந்த போஸ்டர்கள் மீது அதிமுகவின் `ஒரு தாயின் சபதம் என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அமமுகவின் கருத்தை மறைக்கும் பொருட்டு, அதிமுகவினர் போஸ்டர்கள் ஒட்டியதாகவே கூறப்படுகிறது.