Asianet News TamilAsianet News Tamil

ஜெ. மரணத்தில் மர்மம்: சசிகலாவை எதிர்க்கும் ‘சோ’வின் துக்ளக்’!

jayalalitha death
Author
First Published Dec 28, 2016, 11:51 AM IST


ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த முழுவிவரமும் வெளிவர வேண்டும் என்றும், அதிமுகவின் தலைமைப் பதவிக்கு

சசிகலா வரக்கூடாது என்றும் கடுமையான எதிர்ப்பைவெளியிட்டுள்ளது, சோ நிறுவிய துக்ளக் பத்திரிகை.

துக்ளக் பத்திரிகையின் தலையங்கத்தில் ‘ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலா குடும்பம் சதி செய்தது அம்பலமானதால்தான் 

அவர் போயஸ் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இது குறித்துசோவிடம் ஜெயலலிதாவே கூறியிருக்கிறார்’ என்கிறது துக்ளக்.

jayalalitha death

‘அதிமுகவில் ஜெயலலிதா தவிர மற்ற எல்லோருமே சைபர்கள். அந்த சைபர்கள் எல்லாம் சேர்ந்து சசிகலா எனும் 

சைபரை தேர்ந்தெடுத்தால் அவர் சைபர் இல்லை என்று ஆகிவிடுமா?… ஜெயலலிதாபாணியில் சசிகலா தன்னை சின்னம்மா 

என்று அழைத்தால் அது புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டது போலத்தான்’ என்கிறது துக்ளக்.

சசிகலாவிடம் அதிமுக நிர்வாகிகள் தலைமையேற்க கோரிக்கை வைப்பதும், பத்திரிகை முதலாளிகள் 

அவரை வரிசையாக சந்திப்பதும் அப்பட்டமான நாடகம் என்கிறது துக்ளக்.

jayalalitha death

துக்ளக் இதழ் ஜெயலலிதாவின் ஒரே ஆசான் ஆன சோ’வுடையது. அதுமட்டுமல்லாமல், 

இந்தியப் பேரரசை ஆளும் தில்லி தலைமையின் முக்கியமான ஆலோசகரும், 

நாக்பூர் தலைமையகத்தின் முக்கியபிரதிநிதியுமான ஆடிட்டர் குருமூர்த்தியை 

ஆசிரியராகக் கொண்டு துக்ளக் இதழ் வெளிவருகிறது என்பது முக்கியமாக கவனிக்க வேண்டியது ஆகும்.
துக்ளக் இதழின் கடுமையான சசிகலா எதிர்ப்பு – தமிழக அரசியலின் புதிய பரிமாணத்தை எடுத்துக்காட்டுகிறது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios