தீபா யாரென்றே எனக்கு தெரியாது என்றும் அவரை போயஸ் தோட்டத்தில் நான் பார்த்தது கூட இல்லை என்றும் ஜெயலலிதா வீட்டு சமையலர் ராஜம்மாள், நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில் வாக்குமூலம் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன், 2016ம் ஆண்டில் போயஸ்கார்டன் தோட்ட இல்லத்தில் பணியாற்றிய 31 பேரின் பட்டியலை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் வழங்கியிருந்தார். 

இதன் அடிப்படையில் ஜெயலலிதாவின் இல்லத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சமையலராக பணியாற்றிய ராஜம்மாள் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும் ஒபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 

அதன்படி நேற்று சமையலர் ராஜாம்மாள் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். அப்போது, 2016-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை நேரில் பார்த்து பேசினேன் என்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியது. 

தற்போது மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது,  தீபா யாரென்றே எனக்கு தெரியாது என்றும் அவரை போயஸ் தோட்டத்தில் நான் பார்த்தது கூட இல்லை என்றும் ஜெயலலிதா வீட்டு சமையலர் ராஜம்மாள், நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில் வாக்குமூலம் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.