அரசு முறைசுற்றுப் பயணமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இங்திலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்குச் சென்றுவிட்டு இன்று அதிகாலை சென்னை திருப்பினார். கிட்டத்தட்ட 8 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகடிள ஈர்த்துள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.

இந்நிலையில் எடப்பாடி வெளிநாடு புறப்பட்டுச் செல்வதற்கு முன் நடைபெற்ற சில ஸ்வாரஸ்ய சம்பவங்கள் தெரியவந்துள்ளன. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு கிளம்பும்  போது ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று மரியாதை செலுத்திவிட்டுட்டு செல்வார் என்று அமைச்சர்களும், தொண்டர்களும்,  அதிகாரிகளும் எதிர்பார்த்தனர். ஆனால் எடப்பாடி அஞ்சலி செலுத்தாமல் நேராக விமான நிலையத்துக்கு சென்றுவிட்டார்.

இது குறித்து அமைச்சர்கள் சிலர் அவரிடம் கேட்டபோது தான் முதலமைச்சரான பிறகு  முதல்முறையாக வெளிநாடு செல்கிறேன். அதனால் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று விட்டு செல்வது சரியாக இருக்காது என கூறியுள்ளார்.

தொடர்ந்து அமைச்சர்களிடம் பேசிய அவர்,  ஜெயலலிதா உருவத்தில் சசிகலா  இருக்கார் என்று சொன்னதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல்  தான் வெளிநாடு செல்லும் விஷயத்தை சசிகலாவிடம் ஏற்கனவே சொல்லிவிட்டதாகவும் கூறியதாக தகவல் வெளியானது.

இது சில அமைச்சர்களை ஆச்சரியத்திலும்,சிலரை அதிர்ச்சியிலும் ஆழ்த்தியதாக கூறப்படுகிறது.