ஊடகங்களுக்கு அடிக்கடி பேட்டி கொடுக்கும் அவர் ஒருபுறம் திமுக தலைமையையும், மறுபுறம் சசிகலா தரப்பையும் நக்கல் நையாண்டி என விமர்சித்து வருவதை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அதிகமாகவே ரசிப்பதாக கூறப்படுகிறது.

கட்சிக்காக ஜெயக்குமார் சிறைக்கு சென்று வந்துள்ள நிலையில் அவருக்கு முக்கிய பொறுப்பு கொடுத்து அழகு பார்க்க கட்சித் தலைமை முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரத்தில் சசிகலாவை எதிர்ப்பதில் எடப்பாடிக்கு அடுத்த நிலையில் ஜெயக்குமார் இருப்பதால் ஜெயக்குமாரை கவுரவிக்க வேண்டும் என கொங்குமண்டல தலைவர் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையின்கீழ் அதிமுக இயங்கி வருகிறது. சிறையில் இருந்து விடுதலையாகி வந்துள்ள சசிகலா கட்சியை கைப்பற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில் ஓபிஎஸ் அடிக்கடி சசிகலாவுக்கு ஆதரவாக பேசி வருகிறார். இது கொங்கு மண்டல தலைவர்களுக்கு அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது. கட்சியில் தனக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்ளவே ஓபிஎஸ் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு அடிக்கடி இப்படி அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்: மக்களுக்கு உடனுக்குடன் சேவை கிடைக்கலயா அதிகாரிகள் சம்பளத்த பிடியுங்க.. ஸ்டாலினை அலறவிடும் மநீம.

அதேநேரத்தில் சசிகலாவை எதிர்ப்பதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அடுத்து மிகத் தீவிரமாக இருந்து வருகிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். ஊடகங்களுக்கு அடிக்கடி பேட்டி கொடுக்கும் அவர் ஒருபுறம் திமுக தலைமையையும், மறுபுறம் சசிகலா தரப்பையும் நக்கல் நையாண்டி என விமர்சித்து வருவதை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அதிகமாகவே ரசிப்பதாக கூறப்படுகிறது

சசிகலாவை நாம் விட்டாலும் ஜெயக்குமார் விட மாட்டார் போலவே என்று கொங்கு மண்டல தலைவர்கள் ஜெயக்குமாரின் செயல்பாடுகளை நயந்து வியந்து பாராட்டி வருகின்றனர் என்றே கூறப்படுகிறது. அந்த அளவுக்கு கொங்கு மண்டல தலைவர்களின் நம்பிக்கைக்கு உரியவராக ஜெயக்குமார் இருந்து வருகிறார். இந்நிலையில்தான் கள்ள ஓட்டு போட வந்ததாக திமுக தொண்டரை தாக்கிய வழக்கில் ஜெயகுமார் சிறைக்கு சென்று திருப்பி வந்துள்ளார். திருச்சியில் தங்கி அவர் காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு வருகிறார்.

அதிமுக ஆட்சியில் முக்கிய அமைச்சராக இருந்த ஜெயக்குமார் திருச்சிக்கு வந்திருப்பது திருச்சியில் ரத்தத்தின் ரத்தங்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் காவல்நிலையம் வரும்போதெல்லாம் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் குவிந்து அவருடன் அணிவகுத்துச் செல்வது, அவர் காரை விட்டு கீழ் இறங்கியதும் காவல் நிலையத்தில் முழக்கம் எழுப்புவது மாஸ்காட்டு வருகின்றனர். ஜெயக்குமார் வந்தது முதல் திருச்சியில் பரபரப்பாகவே உள்ளது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியுள்ள ஜெயக்குமாருக்கு விதவிதமாக விருந்து படைத்து திருச்சி ரத்தத்தின் ரத்தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் ஜெயக்குமார் மிகுந்த உற்சாகத்துடன் சிரித்த முகத்துடன் தன்னை சந்திக்க வரும் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இதே நேரத்தில் மீண்டும் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் உள்ளிட்ட பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டுமென குரல் எழுப்பி வருகின்றனர். இது கட்சிக்கு நல்லது இல்லை என்றும், தேவையில்லாத நெருக்கடியாகவே அது பார்க்கப்படுகிறது. எனவே ஜெயக்குமார் போன்று கடுமையாக சசிகலா எதிர்ப்பளர்களை கட்சியில் முக்கிய இடத்திற்கு கொண்டு வர வேண்டுமென எடப்பாடி பழனிச்சாமி தரப்பு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஜெயக்குமாருக்கு விரைவில் கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு என்ன பொறுப்பு வழங்கினால் சரியாக இருக்கும் என யோசித்ததில், மதுசூதனன் மறைவுக்குப் பிறகு அக்கட்சியின் அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: ஸ்டாலின் மட்டும் இல்ல ஒவ்வொரு திமுக தொண்டனும் இந்த படத்தை பாருங்க.. வி.பி துரைசாமி கண்ணீர்.

எனவே இந்த இடத்திற்கு ஜெயக்குமார் சரியாக பொருந்துவார் என்றும் கட்சியின் அவைத் தலைவராக ஜெயக்குமார் நியமிக்கப்பட்டு விட்டால் கட்சியின் செயல்பாடுகள் அதிகரிக்கும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் இதற்கான அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றும் அதிமுக கட்சி வட்டாரங்களில் உறுதி செய்யப்படாத தகவல்கள் கசிகிறது.