ஆளும் திமுக அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் வெல்லத்தை வைத்து முன்னாள் அமைச்சர் வீடியோ ஒன்று வெளியிட்டு திமுகவை பங்கமாய் கலாய்த்துள்ளார்.
ஆளும் திமுக அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் வெல்லத்தை வைத்து முன்னாள் அமைச்சர் வீடியோ ஒன்று வெளியிட்டு திமுகவை பங்கமாய் கலாய்த்துள்ளார்.
தைப் பொங்கல் திருநாளை ஏழை, எளிய மக்களும் சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பச்சரிசி, வெல்லம், பாசிப்பருப்பு ,நெய் உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை தமிழக அரசு வழங்கி வருகிறது.

இந்நிலையில், தமிழக அரசு கொடுக்கும் பொங்கல் பை பரிசு பொருட்களுடன் வெல்லமும் கொடுக்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் பொருட்கள் தரமில்லாமல் வருவதாக தொடர் புகார்கள் வருகின்றன. முக்கியமாக வெல்லம் உருகி ஒரு மாதிரியாக ஆகி விடுகிறது. திருவண்ணாமலையில் 2.5 டன் வெல்லத்தை பயன்படுத்த உகந்ததல்ல என ஆட்சியர் நிறுத்தி வைத்துள்ளார். அதேபோல், ஓமலூரில் ரேஷன் கடையில் தரமற்ற வெல்லம் கொடுத்திருக்கிறார்கள். இதைப் பயன்படுத்தி பொதுமக்கள் எப்படி பொங்கல் வைக்கமுடியும் மக்கள் குமுறுகின்றனர்.

அதேபோல், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி திருக்குளம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் நந்தன் என்பவர் பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்கியுள்ளார். அதனை வீட்டிற்கு எடுத்துச்சென்று பிரித்து பார்த்த போது பரிசுத் தொகுப்பில் இருந்த புளி பாக்கெட்டில் பல்லி ஒன்று இறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் திமுக அரசு கொள்ளையடித்தது தான் மிச்சம் எதிர்க்கட்சியில் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். இந்த வெல்லத்தை வைத்துதான் சமூக வலைதளங்களில் அதிகமாக மீம்ஸ்கள் காமெடிகள் இடம்பெற்று வருகிறது. இந்நிலையில், ஜெயக்குமாரும் திமுகவை கலாய்த்துள்ளார்.
இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவரது டுட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்;- அதில், டி.எம்.செளந்தர்ராஜன் பாடிய உள்ளம் உருகுதய்யா - முருகா என்ற பாடலை வெல்லம் உருகுதய்யா என்ற வீடியோவாக ஜெயக்குமார் பதிவிட்டுள்ளார். அதில், வெல்லம் உருகுதய்யா - முருகா, விடியல் ஆட்சியிலே, பல்லி புதைத்திடவே அவர்க்கு புளிதான் கிடைத்ததப்பா என்று ஆளும் திமுக அரசை கலாய்க்கும் வகையில் வீடியோவை பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
