பேசினாலே சிறை என்பது சர்வாதிகாரம். தமிழ்நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது, இதுகுறித்து குடியரசுத் தலைவர், மனித உரிமை ஆணையம் என அனைத்து இடங்களிலும் புகார் தெரிவித்து இருக்கிறேன். என் மீதான பொய் வழக்குக்கு திமுக அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும். சாதி வெறியோடு பேசிய ராஜகண்ணப்பனை பதவி நீக்கம் செய்யாமல் இலாகா மாற்றம் செய்யப்பட்டிருப்பது அவருக்கு கிடைத்த பரிசுதானே தவிற தண்டனை அல்ல. 

பொய்வழக்கு போடுவதில் ஆஸ்கர் விருது பெறுவதற்கு தகுதியான ஆட்சி திமுக ஆட்சி என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பொய் வழக்குக்கான பதிலை திமுக அரசு நிச்சயம் சொல்ல வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தது முதல் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திமுக தொண்டரை நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்திய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருந்து விடுதலையாகி வந்துள்ளார்.

இந்நிலையில் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ள ஜெயக்குமார் ராயபுரம் காவல்நிலையத்தில் இரண்டாவது நாளாக இன்று கையெழுத்திட்டார். அப்போது செய்தியாளரிடம் அவர் கூறியதாவது:- திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் எதிர்க்கட்சிகளை முடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டு வருகிறது. ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெறும் வகையில் பொய் வழக்கு போடும் முதல்வர் ஸ்டாலின் தான் சர்வாதிகாரி என்ற அவர், சர்வாதிகளார்கள் எப்படி வரலாற்றில் விழுந்தார்கள் என்பதை படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். பொய் வழக்கு போட்ட பின் சட்டப்போராட்டம் நடத்தி நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில் கையெழுத்திட வந்திருக்கிறேன்.

பேசினாலே சிறை என்பது சர்வாதிகாரம். தமிழ்நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது, இதுகுறித்து குடியரசுத் தலைவர், மனித உரிமை ஆணையம் என அனைத்து இடங்களிலும் புகார் தெரிவித்து இருக்கிறேன். என் மீதான பொய் வழக்குக்கு திமுக அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும். சாதி வெறியோடு பேசிய ராஜகண்ணப்பனை பதவி நீக்கம் செய்யாமல் இலாகா மாற்றம் செய்யப்பட்டிருப்பது அவருக்கு கிடைத்த பரிசுதானே தவிற தண்டனை அல்ல. ஆனால் பெயருக்கு வெளியே திராவிட மாடல் என்ன சொல்வார்கள். வெளிநாட்டு முதலீடுகள் எல்லாம் எதற்கு என்பதை நினைத்தால் மாலு மாலு மாலு சுராங்கன்னிக்கு மாலு கண்ணாவா என்ற திரைப்பட பாடல் தான் நினைவுக்கு வருகிறது. வெளிநாட்டு பயணத்திற்கு குடும்ப ஆடிட்டர்கள் ஏன் சென்றார்கள் என்பதற்கு மத்திய அரசு விளக்கம் கேட்க வேண்டும் என அவர் கூறினார்.