கடந்த 7-ம் தேதி அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதேபோல அதிமுகவில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவும் அறிவிக்கப்பட்டது. அக்குழுவில் கட்சியின் சீனியர்கள் பெயர் இடம் பெறவில்லை. இதனால், அதிமுகவில் புகைச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுகவில் வழிகாட்டுதல் குழு அறிவிக்கப்பட்டதில் அதிருப்தி ஏதும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் ஜெயக்குமார் கூறுகையில், “அமைச்சர்களுக்கு வழிக்காட்டு குழுவினால் எந்த அதிருப்தியும் ஏற்படவில்லை. முதல்வர் வேட்பாளர் விவகாரத்திலும் கூட்டணி கட்சியினருக்கு எந்த அதிருப்தியும் இல்லை. உழைப்பவர்களுக்கு ஏற்ற அங்கீகாரம் நிச்சயம் கட்சி அளிக்கும்.” என்று தெரிவித்தார். மேலும் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “தமிழகத்தின் கடன் தொகை 2006-ல் திமுக ஆட்சி முடியும் போது ரூ.1 லட்சம் கோடி. திமுக செய்த ஊதாரித்தனமான செலவினால்தான் தமிழகத்தின் கடன் அதிகரித்துள்ளது” என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.