jayakumar is super super chief minister of TN says Stalin
அமைச்சர் ஜெயகுமார்தான் தற்போது சூப்பர் டூப்பர் முதலமைச்சராக செயல்பட்டு வருவதாகவும், சட்டப் பேரவை விவசாரத்தில் அவர் தவறான தகவலை தெரிவித்து வருவதாகவும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டப் பேரவையை உடனடியாக கூட்ட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி அதை சபாநாயகர் தனபாலிடம் அளித்தாகவும், அவர் முதலமைச்சருடன் விவாதித்து உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
ஆனால் தற்போது சூப்பர் டூப்பர் முதலமைச்சராக செயல்பட்டு வரும் அமைச்சர் ஜெயகுமார், சட்டப்பேரவையை கூட்டுவது குறித்து தவறான தகவல்களை தெரிவித்து வருவதாக அவர் கூறினார்.

தமிழகத்தில் தற்போது குடிநீர், விவசாயிகள் தற்கொலை, வறட்சி,நீட் தேர்வு போன்ற பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வேண்டியிருப்பதால் தான் சட்டப் பேரவையை கூட்ட வேண்டும் என திமுக வலியுறுத்துவதாக தெரிவித்தார்.
போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனை முடிவுக்கு வந்திருப்பது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய பணத்தை உடனடியாக அரசு வழங்க வேண்டும் என ஸ்டாலின் கூறினார்.
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் ரெய்டு நடந்தது குறித்து பேசிய ஸ்டாலின், அவர் அதை சட்டரீதியாக சந்திப்பார் என தெரிவித்தார்.
