Asianet News TamilAsianet News Tamil

மக்களவை தேர்தலில் எனது மகனுக்கு சீட் கேட்பது வாரிசு அரசியல் இல்லை- புதிய விளக்கம் அளித்த ஜெயக்குமார்

பொதுச் செயலாளர் தன்னுடைய மகனுக்கு அந்த ஏபி படிவத்தை கையெழுத்து போட்டு கொடுத்தால் அது வாரிசு அரசியல். பொதுச் செயலாளர் அந்த மாதிரி சொந்த காரங்களுக்கோ, யாருக்கும் கொடுக்கவில்லை. எனவே ஜெயவர்த்தனை எடுத்து கொண்டால் வாரிசு அரசியலில் வராது என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  

Jayakumar has said that asking for a seat for his son to contest the election is not succession politics KAK
Author
First Published Feb 21, 2024, 12:40 PM IST

அதிமுகவில் விருப்ப மனு

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களுக்கு விருப்ப மனு இன்று முதல் வழங்கப்பட்டது. விருப்ப மனு பெற்றபின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கள அளவில் அதிமுக தோழர்கள் எழுச்சியை பார்க்கும் போது, பொது மக்களுக்கும் இந்த திமுக  ஆட்சியின் மீது அதிருப்தி இருப்பதாலும், மகத்தான வெற்றி அதிமுக  தலைமையிலான கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் பெறும் என்ற அளவிற்கு இன்றைக்கு பார்க்க முடிகிறது என கூறினார். 

Jayakumar has said that asking for a seat for his son to contest the election is not succession politics KAK

ஜெயவர்தன் போட்டியிட விருப்ப மனு

நாடாளுமன்ற தேர்தலில் தனது மகன் ஜெயவர்த்தனன் போட்டியிடுவதற்காக  விருப்ப மனு பெற்றது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், திமுக ஒரு குடும்ப அரசியல். அப்பா, மகன், பேரன், கொள்ளு பேரன் அந்த தலைமையில் வருகிறது. இங்கு ( அதிமுகவில் ) அப்படி யாரும் இல்லை. இங்கு கொடி பிடிக்கும் தொண்டனுக்கு  கூட பதவியை கொடுத்து அழகு பார்ப்பது அதிமுக தான் என தெரிவித்தார்.  இங்கு வாரிசு அரசியல் கிடையாது. உழைப்பவரே உயர்ந்தவர் என்பது தான் எம்ஜிஆரின் தாரக மந்திரம். உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.

படிவம் ஏபி, பொதுச் செயலாளர் போட வேண்டும். பொதுச் செயலாளர் தன்னுடைய மகனுக்கு அந்த ஏபி படிவத்தை கையெழுத்து போட்டு கொடுத்தால் அது வாரிசு அரசியல். பொதுச் செயலாளர் அந்த மாதிரி சொந்த காரங்களுக்கோ, யாருக்கும் கொடுக்கவில்லை. ஜெயவர்த்தனை எடுத்து கொண்டால் வாரிசு அரசியலில் வராது. 

Jayakumar has said that asking for a seat for his son to contest the election is not succession politics KAK

வாரிசு அரசியலில் வராது

2014 ல் ஏபி படிவத்தில் ஜெயலலிதா தான் கையெழுத்து போட்டார். அப்போது ஜெயலலிதா தான் பொதுச் செயலாளர். அவர் கையெழுத்து போட்டதால் 2014 ல் தேர்தலில் நின்றார். 2019 ல் 8 சதவீகிதத்தில் தான் தென் சென்னையில் ஓட்டு வித்தியாசமே. அந்த அளவிற்கு தான் தோல்வி இருந்தது எனவும், விடாமுயற்சியில் கழக பணி ஆற்றி ஜெயவர்த்தன் போட்டியிட சீட் கேட்பது எப்படி வாரிசு அரசியல் ஆகும்? என கேள்வி எழுப்பினார்.  திமுகவில் கருணாநிதி, ஸ்டாலின்,  உதயநிதி, இன்பதிநிதி என இதுதான் மன்னராட்சி முறையாக மக்களாட்சியை காலில் போட்டு விட்டு, இன்றைக்கு அமைச்சர்கள் மற்றும் பலரும் உதயநிதிக்கு சேவை செய்வதும்,  அடுத்ததாக இன்பதிநிதிக்கு சேவை செய்வதுமாக என்பதை தான் ஊரே எண்ணி நகையாடுகிறது என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

பாஜகவில் இணையபோவது முக்கிய புள்ளி மட்டுமல்ல பெரும்புள்ளி.. டுவிஸ்ட் வைத்து பேசிய அண்ணாமலை.!
 

Follow Us:
Download App:
  • android
  • ios