அமைச்சர் பதவி ஒரு கேடயம்... அது செந்தில் பாலாஜியை சுற்றி இருந்தால் ED செலுத்தும் வாளை தடுக்கும்- ஜெயக்குமார்
அமைச்சராக இருந்தால் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு குந்தகம் விளைவிக்கும், பல உண்மைகள் வெளி வராமல் சென்று விடும் என கூறிய ஜெயக்குமார், சமயோகித புத்தியில் ஆளுநர் செந்தில்பாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி உள்ளதாக தெரிவித்தார்.
கைதி எப்படி அமைச்சரவையில் தொடர முடியும்.?
சென்னை சேப்பாக்கத்தில், கால்பந்து கிளப் லோகோ வெளியீட்டு விழாவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு லோகோவை வெளியிட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது செந்தில் பாலாஜி மீது பல குற்றச்சாட்டுகளை வைத்தார். திமுக ஆட்சிக்கு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சொன்னார். இந்தநிலையில் தான் உச்ச நீதிமன்ற உத்தரவுபடி அமலாக்கத்துறை செந்தில்பாலாஜியை கைது செய்துள்ளது. ஒரு கைதி எப்படி அமைச்சரவையில் நீடிக்க முடியும் என்பது தான் தற்போதைய கேள்வி? செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்பது தான் அதிமுகவின் நிலைபாடு எனவும் கூறினார்.
அமைச்சர் பதவி ஒரு கேடயம்
அதற்காக தான் அதிமுக போராட்டம் நடத்தி, ஆளுநரை சந்தித்து மனு அளித்ததாகவும் கூறினார். அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா ? இல்லையா ? என்பதை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் தான் தெரியவரும். மாநிலத்தின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தினால் அமைச்சராக இருக்கும் நிலையில் விசாரணைக்கு எவ்வாறு ஒத்துழைப்பார். அமைச்சராக இருந்தால் விசாரணைக்கு குந்தகம் விளைவிக்கும் பல உண்மைகள் வெளி வராமல் சென்று விடும் என கூறினார். சமயோகித புத்தியில் ஆளுநர் செந்தில் பாஜியை நீக்கி உள்ளார். அதன் பின் அட்டர்னி ஜெனரலிடம் கலந்து ஆலோசிப்பதாக தெரிவித்துள்ளார். அமைச்சர் பதவி என்பது ஒரு கேடயம், அது செந்தில் பாலாஜியை சுற்றி இருந்தால் அமலாக்கத்துறை செலுத்தும் வாள் அந்த கேடயம் தடுக்கும்,
மக்களின் வரி பணம் வீண்
கேடயத்தை பயன்படுத்தி அமலாக்க துறையின் வாளை தடுப்பதுதான் மாநில அரசின் உச்சபட்ச எண்ணமாக இருக்கிறது எனவும் ஜெயக்குமார் கூறினார். அமலாக்கத்துறை கைது செய்து கைதி என் கொடுக்கப்பட்ட நபர் எவ்வாறு அமைச்சராக தொடர முடியும். அது தான் எங்கள் கேள்வி? அதுனால தான் நாங்கள் ஆளுநரிடம் மனு அளித்தோம். எங்கள் ஆட்சி காலத்தில் அக்ரி கிருஷ்ண மூர்த்தியை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்து நீக்கினார். இது போன்று நீக்குங்கள் என ஆளுநரிடம் உதாரணங்களை நாங்கள் கூறினோம். இலாகா கவனிக்க தான் ஒரு அமைச்சர். இலாகா இல்லாத அமைச்சருக்கு எதற்க்கு மக்களின் வரி பணம் என்பது தான் எங்கள் கேள்வி எனவும் ஜெயக்குமார் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
தமிழக அரசுடன் உச்சகட்ட மோதலில் ஆர்.என்.ரவி..! ஆளுநர் வழுக்கிய பிரச்சனைகள் என்னென்ன தெரியுமா?