எம்ஜிஆர் சிலை மீது பெயிண்ட் ஊற்றிய நபர்களை கைது செய்யலைனா பெரிய அளவில் போராட்டம்- ஜெயக்குமார் எச்சரிக்கை

எம்.ஜி.ஆர் மறைந்து 35 ஆண்டுகள் கடந்தும் அவர் மீது பயம் உள்ளதாக கூறிய ஜெயக்குமார் அதிமுகவை எதிர்க்க திராணியற்றவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார்.

Jayakumar demands to arrest those who poured paint on MGR statue

எம்ஜிஆர் சிலை மீது பெயிண்ட் ஊற்றிய மர்ம நபர்கள்

சென்னை ராயபுரம் பகுதியில் 1994 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் சிலை நிறுவப்பட்டது. அப்போது அமைச்சராக இருந்த டி.ஜெயக்குமார், எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்தார். இந்தநிலையில் நேற்று நள்ளிரவு எம்ஜிஆர் சிலையின் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் சிவப்பு வண்ணத்தை பூசி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ராயபுரம் அதிமுக பகுதி கழக செயலாளர் பழைய வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அந்தபடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . இந்த சம்பவம் தொடர்பாக சிலை உள்ள பகுதியில் அதிமுகவினர் அதிக அளவில் திரண்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Jayakumar demands to arrest those who poured paint on MGR statue

 குற்றவாளிகளை கைது செய்திடுக

எம்ஜிஆர் சிலை  மீது பெயிண்ட் ஊற்றப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிலையினை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார். சிலையின் மீது இருந்த பெயிண்டினை துடைத்த அவர், சிலைக்கு பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்.ஜி.ஆரை தெய்வமாக பார்ப்பதாகவும், எம்.ஜி.ஆர் மறைந்து 35 ஆண்டுகள் கடந்தும் அவர் மீது பயம் உள்ளதாக கூறிய அவர், அதிமுகவை எதிர்க திராணியற்றவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார். பெயிண்ட் ஊற்றுவதால் எம்.ஜி.ஆரின் புகழை மறைக்க முடியாது எனவும், பெயிண்ட் ஊற்றிய உண்மை நபர்களை கைது செய்யவில்லை என்றால் பெரிய போராட்டம் நடத்துவோம் என ஜெயக்குமார் எச்சரித்தார். 

இதையும் படியுங்கள்

கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்கப்படுகிறதா.? நினைவிடப் பணி எந்த நிலையில் உள்ளது.? அமைச்சர் எ.வ வேலு தகவல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios