எடப்பாடி பழனிசாமி அணி மீது வீண் பழி சுமத்தி டிடிவி தினகரன் ஆதாயம் தேட முயல்வதாக நிதியமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் இன்று நிதியமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் மதுரையைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களே கலந்து கொள்ளவில்லை என்று கூறினார்.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கடத்தப்பட்டதாக தினகரன் கூறியது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், கடத்துவதற்கு எம்.எல்.ஏ.க்கள் ஒன்றும் குழந்தை அல்ல என்று கூறினார்.

எம்.எல்.ஏ.க்கள் கடத்தி வைத்ததாக டிடிவி தினகரன் கூறுவது போகாத ஊருக்கு வழி கேட்கிற கதையைப்போல் உள்ளது என்றார்.

எடப்பாடி பழனிசாமி அணி மீது வீண் பழி சுமத்தி டிடிவி தினகரன் ஆதாயம் தேட முயல்வதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.