சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவ்வப்போது ஆன்மீக பயணமாக இமயமலைக்கு சென்று வருவதை தன்னுடைய வழக்கமாக கொண்டுள்ளார். 

இவர் கடந்த வருடம் இமயமலையில் பாபாஜி ஆசிரமம் ஒன்றையும் கட்டினார். ஆனால் இந்த கோவில் திறப்பு விழாவில் சில காரணங்களால் இவரால் கலந்துக்கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தகது. 

ஆன்மீக  பயணம்:

விரைவில் முழு அரசியல் பணியில் ஈடுப்பட உள்ள இவர் நேற்று ஆன்மீக பயணமாக இமயமலைக்கு கிளம்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த். 'இமயமலையில் உள்ள பாலாஜி ஆசிரமம், ரிஷிகேஷ், ஆகிய இடங்களுக்கு சென்றுவிட்டு 15 நாட்கள் கழித்து தான் மீண்டும் சென்னை திரும்பவுள்ளதாக தெரிவித்தார். 

அமைச்சர் ஜெயகுமார்:

ரஜினிகாந்தின் இந்த ஆன்மீக பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் 'ஆன்மீக சுவாமி மலையேறிவிட்டார்' என்று கிண்டலாக கூறியுள்ளார்.