jayakumar against speech for ttv dinakaran
சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர், ஜெயகுமார்.
ஆடிட்டர் குருமூர்த்தி அரசியல் குருமூர்த்தி ஆகக் கூடாது என்றும், சும்மா இருக்கும் சங்கை ஊதிக் கெடுத்தார் ஆண்டி என்ற பழமொழிக்கு ஏற்றப் போல் சும்மா இருக்கும் ரஜினிகாந்தை குருமூர்த்தி ஊதி கெடுத்துவிடக் கூடாது என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.
நதிகளை இணைப்பது குறிக்கோளாக இருந்தாலும், முன்னர் ஒரு பிரச்சினைக்காக ஒரு கோடி ரூபாய் கொடுப்பதாக ரஜினி கூறினாரே, அது என்னவாயிற்று என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
டிடிவி தினகரன், தமிழ்நாட்டை சுவாஹா செய்ய நினைத்த விலாங்கு மீன் என்றும், இருப்பினும், தாங்கள், வஞ்சிரம் மீன் போன்று உறுதியோடு செயல்படுவதாக ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.
