jayakkumar said i will tell only investigation commission

ஜெயலலிதாவை யார் யார் பார்த்தார்கள் என்று அவர்களுக்குத்தான் தெரியும் எனவும் மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்த்தேனா என்பது குறித்து விசாரணை ஆணையத்தில் மட்டுமே தெரிவிப்பேன் எனவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் வெகுநாட்களாகவே ஒரு புதிராக இருந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது நாங்கள் யாரும் பார்க்கவில்லை எனவும் சசிகலா தரப்பு என்ன கூறியதோ அதையே மக்களிடம் தெரிவித்தோம் எனவும் தெரிவித்தார்.

மேலும், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், அளித்த பேட்டியில், எந்த அமைச்சர்களும் ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்க்கவில்லை எனவும் ஆளுநர் வந்து பார்க்கும் போது கூட ஜெயலலிதாவுக்கு சுயநினைவு இல்லை எனவும் என கூறியிருந்தார்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஜெயலலிதாவை யார் யார் பார்த்தார்கள் என்று அவர்களுக்குத்தான் தெரியும் எனவும் மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்த்தேனா என்பது குறித்து விசாரணை ஆணையத்தில் மட்டுமே தெரிவிப்பேன் எனவும் தெரிவித்தார்.