Asianet News TamilAsianet News Tamil

ஆர்.கே நகரில் தீபாவை களமிறக்க துடிக்கும் கூட்டம் - போட்டியிடுவாரா?

jaya niece-deepa-in-eelction
Author
First Published Dec 9, 2016, 3:40 PM IST


ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி... பழைய சென்னையில் முக்கியத் தொகுதியான இங்கு ஒரு வருட காலத்திற்குள் மூன்றாவது தேர்தலை சந்திக்க தயாராகியுள்ளது.

கடந்த ஆட்சியின் போது அதிமுகவின் வெற்றிவேல் கம்யுனிஸ்ட் கட்சியின் மகேந்திரனை தோற்கடித்து எம்எல்ஏ ஆனார்.

பின்னர் சொத்து வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவிற்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததால் அவர் போட்டியிட ஏதுவாக ஆர்.கே.நகரில் தனது பதவியை ராஜினமா செய்தார் எஸ்.ஆர்.வெற்றிவேல்.

அப்போது நடைபெற்ற இடைதேர்தலில் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வர் ஆனார் ஜெயலலிதா.

பின்னர் 2016 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா ஆர்.கே.நகரில் போட்டியிட்டு திமுகவின் சிம்லா முத்து சோழனை வெற்றிபெற்றார்.

பின்னர் தற்போது 4 மாதத்திற்குள் ஜெயலலிதா மரணமடைந்ததால் மீண்டும் இடைதேர்தலை சந்திக்க கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது ஆர் .கே .நகர்

jaya niece-deepa-in-eelction

இந்நிலையில் ஆர்.கே நகர் தொகுதியில் சசிகலா அல்லது அவரது சகோதரன் திவாகரன் போட்டியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளன

இந்த நிலையில் அசப்பில் ஜெயலலிதா போன்றே இருக்கும் அவரது சொந்த அண்ணன் மகள் தீபா ஜெயக்குமாரை களத்தில் இறக்கிவிட வேண்டும் என நினைகின்றனர்

jaya niece-deepa-in-eelction

தீபாவை வைத்து ஆதாயம் அடைய நினைக்கும் சிலர் கங்கணம் கட்டி கொண்டு அலைவதாக தெரிகிறது. இன்னும் ஒரு சில மாதங்களுக்குள் ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதிக்கு இடைதேர்தல் அறிவிக்கப்பட்டுவிடும்.

எது எப்படியோ மீண்டும் ஒரு தேர்தலுக்கு தயாராகிறது ஆர்.கே.நகர்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios