Asianet News TamilAsianet News Tamil

ஆளில்லாத எடப்பாடி விழாவும்... அலைமோதிய ஓபிஎஸ் நிகழ்ச்சியும் - சசிகலா தரப்பு அதிர்ச்சி

jaya birthday-in-ops-home-l7v7zt
Author
First Published Feb 24, 2017, 2:19 PM IST


முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்ட ஜெ. பிறந்தநாள் விழாவில் 100க்கும் குறைவான தொண்டர்களே இருந்தனர்.

அதே நேரம் ஓபிஎஸ் கலந்து கொண்ட விழாவில் ஆயிரகணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாட படுகிறது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு வரும் முதல் பிறந்தநாள் இது என்பதால் முக்கியவத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

jaya birthday-in-ops-home-l7v7zt

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வர் பதவியை கைப்பற்றுவதில் சசிகலா காட்டிய முனைப்பு காரணமாக ஓபிஎஸ் வெளியேறினார்.

இதனால் ஓபிஎஸ்சுக்கு ஆதரவு பெருகியது.மறுபுறம் சசிகலா தர்பினருக்கு எதிராக கடும் அதிருப்தி நிலவியது.

தினகரன்,வெங்கடேஷ் போன்றவர்களை கட்சிக்குள் கொண்டு வந்ததும் அதிருப்திக்கு காரணமாக அமைந்தது.

கட்சியில் உள்ள எம்எல்ஏக்களை கூவத்தூரில் அடைத்து வைத்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆனதால் சசிகலா தரப்பை ஆதரித்த எம்எல்ஏக்கள் சொந்த தொகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

jaya birthday-in-ops-home-l7v7zt

இதனிடையே ஓபிஎஸ் தீபா இணைப்பு, தீபக்கின் திடீர் பேட்டி, போன்றவை காரணமாக இன்னும் சிக்கல் அதிகமானது.

ஜெ.பிறந்தநாளை தனது அரசியல் பிரவேச நாளாக அறிவித்துள்ளதாக தீபா தெரிவித்தார்.

ஜெ.பிறந்தநாளை தங்கள் பலத்தை காட்ட ஒவ்வொருவரும் முயற்சி எடுத்தனர் .

ஓபிஎஸ் தரப்பில் ஆர்.கே.நகரில் பிரம்மாண்ட விழா நடத்தி தனது பிரசார பயணத்தை துவக்கவுள்ளதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

jaya birthday-in-ops-home-l7v7zt

இன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி சசிகலா தரப்பில் டிடிவி தினகரன், முதல்வர் பழனிச்சாமி பங்கேற்கும் நிகழ்ச்சி கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.

கடந்த ஆண்டு வரை ஜெ பிறந்தநாள் என்றால் கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் கூட்டம் களை கட்டும்.

1000கணக்கில் மகளிரணியினர், தொண்டர்கள் உற்சாகமாக திரண்டு ஜெயலலிதாவுக்கு வாழ்த்து சொல்வார்கள்.

ஆனால் இந்த ஆண்டு கட்சியின் பொது செயலாளர் சசிகலா சிறையில் உள்ள நிலையில் துணை பொது செயலாளர் தினகரன், முதல்வர் எடப்பாடி மற்றும் அமைச்சர்கள் உட்பட பலர் கலந்து கொண்ட கூட்டத்தில் 100க்கும் குறைவான தொண்டர்களே இருந்தனர்.

 

ஜெயலலிதா மறைந்து 3 மாதத்துக்குள் வருகிற அவரது பிறந்தநாளில் கட்சி தலைமை அலுவலகத்திலேயே குறைந்த அளவிலான தொண்டர்கள் வந்தது சசிகலா தரப்பை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

jaya birthday-in-ops-home-l7v7zt

உளவுத்துறை,போலீசார் பதிவு செய்துள்ள ரிப்போர்ட்டில் 100 பேர் வரை கலந்து கொண்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

மறுபுறம் ஓபிஎஸ் ஆர்.கே.நகரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 15,000க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டதாக உளவுத்துறை போலீசார் கணக்கெடுத்துள்ளனர்.

ஆனால் தொண்டர்கள் கூட்டம் அதையும் தாண்டி இருக்குமென்று கூறப்படுகிறது.

காலையில் பேரவை அலுவலகத்தை திறந்த தீபாவுக்கு கூடிய கூட்டத்தில் 10% கூட அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வரவில்லை என்பது அதிமுக தலைமைக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios