மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 69 ஆவது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஜெயலலிதாவின் பிறந்த நாளை சசிகலா மற்றும் ஓபிஎஸ் அணியினர் போட்டி போட்டுக் கொண்டு கொண்டாடி வருகின்றனர்.ஜெவின் அண்ணன் மகள் தீபாவும் தனி அணியாக ஜெயலலிதா பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்

அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் ஜெயலலிதா படத்திற்கு படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் ஓபிஎஸ் தனது வீட்டில் தொண்டர்கள் புடைசூழ ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதையொட்டி ஓபிஎஸ் வசிக்கும் சென்னை கிரீன்வேய்ஸ் சாலை முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது.

இன்று அதிகாலை முதல் ஓபிஎஸ் வீட்டுக்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். அவர்கள் அனைவரையும் ஓபிஎஸ் வரவேற்றார். பின்னர் ஓபிஎஸ் வீட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்துக்கு ஓபிஎஸ் மற்றும் அவரது அணி முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே ஜெ,பிறந்த நாளான இன்று ஓபிஎஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளார் என்று கூறப்படுகிறது. அதை இன்று மாலை ஆர்.கே.நகர் பகுதியில் நடைபெறவுள்ள ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் என்ன அறிவிப்பை வெளியிட உள்ளார் என்பதை பொது மக்களைவிட சசிகலா அணியினரே அதிகம் எதிர்பார்த்துள்ளனர்.