தனியார் தொலைக்காட்சியில் நேர்காணலில் பல கேள்விக்கு பதிலளித்த அண்ணா திராவிடர் கழகம் தலைவர் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த், தினகரனின் ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து பல ரகசியங்களை கூறியுள்ளார்.

அதில், ஆமாம் டோக்கன் கொடுத்தது உண்மைதான், மாமுக நிர்வாகிகளின் ஸ்டேட்மென்ட் வச்சி பார்க்கும் போது பணம் கொடுத்ததை அவங்களே ஒத்துக்கிட்டாங்க, ஆர்கேநகரில் தினகரன் ஜெயிச்சத மட்டும் பார்க்கிறிங்க, அவர் ஜெயிக்கறத்துக்கு பாதி வேலையை செய்து கொடுத்ததே எடப்பாடி பழனிசாமிதான் என சொன்னார்.

அதிமுக வேட்பாளராகவே அந்த தொகுதியில் அறிமுகமானார். என சொல்லிக்கொண்டிருக்கும்போது குறுக்கிட்டு கேள்வியை கேட்ட தொகுப்பாளர். தேர்தல் தள்ளிப்போவதற்கு முன்பே தொப்பி சின்னத்திற்கு 6000 ரூபாயும், மற்ற கட்சிகள் 4000 மற்றும் 3000 என கொடுத்ததாக சொன்னார்கள். அதுமட்டுமல்ல தினகரன் டோக்கன் கொடுத்ததாக சொல்வது உண்மையென அவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.

மேலும் அந்த டோக்கனுக்கு 10000   கொடுத்ததாக சொல்கிறார்களே உண்மையா? எனக் கேட்டார். அதற்கு பதிலளித்த திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் , மமமுக நிர்வாகிகள் சொல்வது என்னென்ன? ஆர்கேநகரில் 20 ரூபாய் டோக்கன் கொடுக்க சொன்னார்கள், டோக்கனுக்கு 10000 ரூபாய் கொடுத்தார்கள், இன்னும் பாதி டோக்கனுக்கு கொடுக்கவில்லை  அதனால் டோக்கனுக்கு காசு கேட்டு அந்த மக்கள் எங்களுக்கு போன் போட்டு டார்ச்சர் செய்கிறார்கள் என சொன்னதாக தெரிவித்தார்.

டோக்கனுக்கு காசு கொடுத்தது உண்மைதான் அதான் நிர்வாகிகளே சொல்றாங்களே, என சொன்ன அவர் அந்த காசை மொத்தமாக அந்த தொகுதிக்கு தேவையானதை செய்திருந்தால் மொத்த பிரச்சனையும் முடிந்திருக்கும் என அட்வைசும் செய்துள்ளார்.