பாமகவினரை தூக்கி உள்ளே வையுங்க..! கோபத்தில் கொப்பளிக்கும் ஜவாஹிருல்லா...! 

சென்னையில் பிரபல ஆங்கில பத்திரிக்கை அலுவலகத்தில் வன்முறை நடந்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என குறிப்பிட்டு மனிதநேய மக்கள் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது.

அதன் விவரம்:-

பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் அவைக்கு வருகை தருவது மிக மோசமானதாக உள்ளதாகவும் அவர் விவாதங்களில் பங்கேற்றது குறைவு என்றும் பிரபல ஆங்கில பத்திரிக்கை நிறுவனம் செய்தி வெளியிட்டு இருந்தது 

மாநிலங்களவைக்கு அதிகம் வராத அன்புமணி ராமதாஸ் அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களுக்கு எதிரான குடியுரிமை திருத்த மசோதா தொடர்பான வாக்களிப்பில்  மட்டும் பங்குகொண்டு மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மாநிலங்களவையில் அன்புமணி ராமதாஸ் அவர்களின் பங்களிப்பு குறித்த விமர்சன செய்தியை வெளியிட்டதற்கு அதன் அலுவலகத்திற்குள் சென்று பாமகவினர் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.

எனவே வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்து உள்ளார்.