ஆளுநர் மாளிகையில் மூடப்பட்ட பள்ளிவாசல்..! உள்நோக்கத்தோடு அடைக்கப்பட்டுள்ளதா.? சந்தேகத்தை எழுப்பும் ஜவாஹிருல்லா

ஆளுநர் மாளிகையில் இருந்த பள்ளிவாசல் மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா பள்ளிவாசலில் தொடர்ந்து தொழுகை நடைபெற ஆவன செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Jawahirullah has demanded to open the closed mosque in the Governor House

ஆளுநர் மாளிகையில் பள்ளிவாசல்

ஆளுநர் மாளிகையில் இருந்த பள்ளிவாசல் பூட்டப்பட்டு இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா அந்த மசூதியை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் ஆளுநர் மாளிகையின் முதல்வாசல் அருகே பல ஆண்டுகளாக ஒரு பள்ளிவாசல் இயங்கிவந்தது. பயணிகளுக்கும், சுற்றுப்புறத்தில் பல்வேறு பணிகளில் இருப்போர்க்கும் தொழுகையை நிறைவேற்ற இப்பள்ளிவாசல் பெரும் உதவியாக இருந்தது. ஐவேளைத் தொழுகை, வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை, ரமலான் மாதத்தில் இரவுத் தொழுகைகள் யாவும் இப்பள்ளிவாசலில் மிகவும் அமைதியாக நடந்துவந்தன. இந்தப் பள்ளிவாசலாலோ, பள்ளிவாசலுக்கு வருபவர்களாலோ எவ்விதத் தொந்தரவும் பிரச்சினையும் இதுவரை ஏற்பட்டதில்லை.

திமுக அறக்கட்டளை நிதியை வச்சு பேனா சின்னத்தை எங்க வேணாலும் வைங்க.!! திமுகவுக்கு விஜயபிரபாகரன் கொடுத்த அட்வைஸ்

Jawahirullah has demanded to open the closed mosque in the Governor House

பள்ளிவாசலை திறக்க வேண்டும்

தொழுகைக்கு வருபவர்கள் தங்களைப் பற்றிய விவரங்கள் மற்றும் வாகன விவரங்களை நுழைவாயிலில் காவல் அதிகாரிகளிடம் பதிவு செய்துவிட்டே தொழுது வந்தனர். கொரோனாவில் பூட்டப்பட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட்டு இயல்புநிலைத் திரும்பிவிட்ட பிறகும் ஆளுநர் மாளிகை வளாகப் பள்ளிவாசல் மட்டும் தொடர்ந்து பூட்டப்பட்டு தொழுகைக்கு அனுமதியும் மறுக்கப்பட்டு வருகிறது. இது மிகவும் வேதனைக்கும் கண்டனத்திற்கும் உரியது. இதில் உள்நோக்கம் உள்ளதோ என்ற ஐயமும் ஏற்படுகிறது. இதுகுறித்து ஆளுநர் உரிய கவனமெடுத்து, பல ஆண்டுகளாக அமைதியாகத் தொழுகை நடந்துவந்த பள்ளிவாசலில் தொடர்ந்து தொழுகை நடைபெற ஆவன செய்ய வேண்டுவதாக ஜவஹிருல்லா கேட்டுக்கொண்டுள்ளார். 

இதையும் படியுங்கள்

அதிமுக வேட்பாளரை அறிவிக்க கூட அண்ணாமலையின் அனுமதிக்காக காத்திருந்த இபிஎஸ்.! பாஜகவின் கொத்தடிமை -சிபிஎம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios