காஷ்மீரின் வரலாறு தெரியாமல் நடிகர் ரஜினிகாந்த் பேசுவதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா குற்றம்சாட்டி உள்ளார். 

பக்ரீத் பண்டிகையையொட்டி சென்னை, பாரிமுனையில் உள்ள டான் பாஸ்கோ பள்ளியில் சிறப்பு தொழுகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஏராளமான இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் பக்ரீத் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’நடிகர் ரஜினிகாந்த் காஷ்மீரின் வரலாறு அறியாமல் இருப்பதால்தான் மோடியையும், அமித்ஷாவையும் பாராட்டி வருகிறார். வரலாற்றை நன்கு அறிந்தபின் நடிகர் ரஜினிகாந்த் கருத்து சொல்லட்டும்’’ என அவர் தெரிவித்தார். 

நேற்று சென்னையில் நடந்த விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த், மோடி - அமித் ஷா இருவரும் கிருஷ்ணா - அர்ஜூன் என பாராட்டிய அவர், காஷ்மீரில் சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்ததற்கும் அவர் தெரிவித்து இருந்தார்.