Jawahirulla will sent one year jail

விதிகளை மீறி வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்பட 5 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை மாவட்ட 6-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசிடம் முறையாக அனுமதி பெறாத சங்கத்தின் மூலம் கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் 2000 ஆவது ஆண்டு வரை வெளிநாடுகளில் இருந்து 1 கோடியே 54 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றதாக ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் மீது புகார் எழுந்தது.

இது தொடர்பாக, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, பொதுச் செயலாளர் ஹைதர் அலி உள்பட 5 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றம், ஜவாஹிருல்லா உள்ளிட்ட 5 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து கடந்த 2011-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற அனைவரும் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை மாவட்ட 6-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றதில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.தனசேகரன், விதிகளை மீறி வெளிநாடுகளிலிருந்து பணம் பெற்ற ஜவாஹிருல்லா உள்பட 5 பேர் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்து, எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து ஜவாஹிருல்லா உள்ளிட்ட பேரின் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.