Asianet News TamilAsianet News Tamil

ஜார்கண்டில் மாநில முதல்வர் சுயேட்சையிடம் தோற்ற பரிதாபம்... மீளா அதிர்ச்சியில் பாஜக தலைமை!

வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதல்வே சுயேட்சை வேட்பாளர் சரயு ராய் முன்னிலையில் இருந்தார். இறுதியில் 15,815 வாக்குகள் கூடுதலாகப் பெற்று முதல்வர ரகுபர் தாஸை தோற்கடித்தார். இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், முதல்வரை தோற்கடித்த சரயு ராய், ரகுபர் தாஸ் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர். அவருக்கு பாஜகவில் மீண்டும் சீட்டு கொடுக்காததால், முதல்வரை எதிர்த்து ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் சுயேட்சையாக களமிறங்கி வெற்றி பெற்றுள்ளார்.
 
Jarkhant Chief minister Raguvar dhas lost to independent candidate
Author
Jamshedpur, First Published Dec 24, 2019, 7:09 AM IST

ஜார்க்கண்ட் தேர்தலில்  மாநில முதல்வர் ரகுபர் தாஸ் சுயேட்சை வேட்பாளரிடம் தோற்றதால் பாஜக தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது.Jarkhant Chief minister Raguvar dhas lost to independent candidate
ஜார்கண்டில் 5 கட்டங்களாக நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. 81 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட இந்த மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க 41 உறுப்பினர் தேவை. வாக்கு எண்ணிக்கையில் பாஜகவுக்கும் காங்கிரஸ் கூட்டணிக்கும் தொடக்கம் முதலே இழுபறி ஏற்பட்டது. இறுதியில் காங்கிரஸ் கூட்டணி மெஜாரிடிக்குத் தேவையான இடங்களைத் தாண்டி 45 தொகுதிகளில் வெற்றி பெற்றன. பாஜக 25 தொகுதிகளில் வெற்றி பெற்றது.Jarkhant Chief minister Raguvar dhas lost to independent candidate
பாஜக இத்தேர்தலில் தோல்வியடைந்ததைத் தாண்டி மாநில முதல்வர் ரகுபர் தாஸ் தோல்வியடைந்தது பாஜக தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2014 தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மாநில முதல்வராக ரகுபர் தாஸ் பொறுப்பேற்றார். அவருடைய தலைமையில்தான் பாஜக தேர்தலை எதிர்கொண்டது. பாஜக மீண்டு வெற்றி பெற்றால், ரகுபர் தாஸ் முதல்வராவார் என்றே பாஜக தரப்பில் கூறப்பட்டது. ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் ரகுபர் தாஸ் போட்டியிட்டார். அவரை எதிர்த்து 21 வேட்பாளார்கள் களத்தில் இருந்தனர்.

Jarkhant Chief minister Raguvar dhas lost to independent candidate
வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதல்வே சுயேட்சை வேட்பாளர் சரயு ராய் முன்னிலையில் இருந்தார். இறுதியில் 15,815 வாக்குகள் கூடுதலாகப் பெற்று முதல்வர ரகுபர் தாஸை தோற்கடித்தார். இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், முதல்வரை தோற்கடித்த சரயு ராய், ரகுபர் தாஸ் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர். அவருக்கு பாஜகவில் மீண்டும் சீட்டு கொடுக்காததால், முதல்வரை எதிர்த்து ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் சுயேட்சையாக களமிறங்கி வெற்றி பெற்றுள்ளார்.

Jarkhant Chief minister Raguvar dhas lost to independent candidate
பாஜக தோல்வியடைந்ததைத் தாண்டி மாநில முதல்வரே தேர்தலில் சுயேட்சை வேட்பாளரிடம் தோல்வியடைந்ததால், பாஜக தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது. மோடியை முன்னிறுத்தியே ஜார்கண்டில் தேர்தல் பிரசாரம் நடைபெற்றன. காஷ்மீரில் 370வது சட்டப் பிரிவு நீக்கம், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நீதிமன்றம் வழன்கிய உத்தரவு உள்ளிட்ட விஷயங்களை மோடி பிரசாரத்தில் முன்வைத்தார். ஆனால், பாஜக தோல்வியைத் தழுயது ஏன் என்ற குழப்பத்திலும் அதிர்ச்சியிலும் உள்ளனர். ஆனால், “ஜார்கண்டில் ஏற்பட்ட தோல்விக்கு பாஜக காரணம் அல்ல; நான்தான் காரணம்” என்று பழியை ரகுபர் தாஸ் ஏற்றுக்கொண்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios