ஜெகன் மாமனாருக்கு இவ்வளவு பெரிய பதவியா..?

திருப்பதி திருமலை தேவஸ்தான தலைவராக, முதல்வராக பதவியேற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டியின் மாமனாரான சுப்பா ரெட்டி நியமனம் செய்ய உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

அதே நேரத்தில் இதற்கு எதிராக, அவர் ஒரு கிறிஸ்தவர் என்ற பிரச்சாரமும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதன்படி ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவி ஏற்றுள்ளார். எப்போதுமே ஆந்திராவில் ஆட்சி மாறியவுடன் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவர் பதவி வகிப்பவரும் மாற்றப்படுவது வழக்கம்.காரணம் திருமலை தேவஸ்தானம் ஆந்திர அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதே...

இது ஒருபக்கம் இருக்க.. ஜெகன்மோகன்  ரெட்டியின் மாமனார் சுப்பாராவ் தான் அடுத்த தேவஸ்தான தலைவர் என்ற தகவல் வெளியான உடனே, அவருக்கு எதிராக பேஸ்புக் டுவிட்டர் இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூக வலைதளங்களிலும் அவர் ஒரு கிறிஸ்தவர்.. எப்படி கோவில் கமிட்டி தலைவராக முடியும் என தொடர்ந்து கேள்வி எழுப்பியவாறு இருந்தனர். இதனைத் தொடர்ந்து சுப்பாராவ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தான் பாரம்பரியமாகவே ஒரு இந்து என்றும்.. இந்து மதத்தின் கலாச்சாரத்தை தவறாமல் கடைபிடித்து வருவதாகவும் விஷமிகளின் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என டுவிட் செய்துள்ளார்.

இதுகுறித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர்களில் சிலர் தெரிவிக்கும்போது, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் குடும்பம்தான் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுவதாகவும், ஆனால் அவருடைய மாமனார் இந்து மதத்தை பின்பற்றுவதாக பேசி வருகின்றனர். இது மட்டுமல்லாமல் திருப்பதி திருமலை தேவஸ்தான தலைவர் பதவிக்கு யார் வந்தாலும் அவர் கிறிஸ்தவரா? இந்துவா? என்ற ஒரு பரபரப்பு எப்போதும் ஏற்படும். 

உதாரணத்திற்கு இதற்கு முன்னதாக முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு நியமித்த புட்டா சுதாகர் யாதவையும் ஒரு கிறிஸ்தவர் என விமர்சனத்தை முன்வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும் ஜெகன்மோகன் ரெட்டியின் மாமனார்தான் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பதவிக்கு அமர்த்தப்படுவார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடவில்லை.

மேலும் அவரை ராஜ்யசபா எம்பியாக உயர்த்த அடுத்த கட்ட நகர்வை எடுத்துள்ளதாக கட்சி வட்டாரத்திற்குள் பேசி வருகின்றனர். இந்த சம்பவம் ஆந்திர அரசியல் வட்டாரத்தில் ஒரு விதமான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது